பலத்த மழையால் வீடுகளுக்குள் புகுந்த மழைநீர்- 3லட்சம் மதிப்புள்ள பொருள்கள் நாசம்

தமிழகம்

பலத்த மழையால் வீடுகளுக்குள் புகுந்த மழைநீர்- 3லட்சம் மதிப்புள்ள பொருள்கள் நாசம்

பலத்த மழையால் வீடுகளுக்குள் புகுந்த மழைநீர்- 3லட்சம் மதிப்புள்ள பொருள்கள் நாசம்

திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரம் மற்றும் அதனை சுற்றியுள்ள கள்ளிமந்தயம் பொருளூர், சத்திரப்பட்டி, விருப்பாச்சி, ரெட்டியார்சத்திரம், ஆகிய பகுதிகளில் நேற்று இரவு 10 மணிக்கு மேல் சுமார் நான்கு மணி நேரத்திற்கும் மேலாக இடி மின்னலுடன் பலத்த மழை பெய்து வந்தது,

இதனால் ஒட்டன்சத்திரம் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் பொதுமக்களின் பாதுகாப்பிற்காக இரவில் மின்சாரம் துண்டிக்கப்பட்டு மின் சேவை நிறுத்தப்பட்டு இருந்தது,

இந்தநிலையில் ஒட்டன்சத்திரம் நகராட்சிக்குட்பட்ட 1வது வார்டு பகுதியான குமராயிபுதூர், செல்லப்பன்கவுண்டன் புதூர் ஆகிய பகுதிகளில் நீர் பெருக்கெடுத்து அப்பகுதியில் உள்ள விவசாய நிலங்களில் சுமார் மூன்று அடிக்கு அதிகமாக தேங்கி நிற்கிறது இப்பகுதியில் விவசாயம் செய்து வருபவர் சண்முகவேல் இவரது தோட்டத்தில் உள்ள சுமார் 70 முதல் 90 அடியுள்ள இரண்டு கிணறுகளும் விடிய விடிய பெய்த கனமழையால் நிரம்பி வழிந்தது மேலும் அப்பகுதியில் உள்ள குடியிருப்பு பகுதிகளில் உள்ள வீடுகளில் இடுப்பு அளவிற்கு தண்ணீர் உட்புகுந்து உள்ளதால் வீட்டில் டிவி, கட்டில், பிரிட்ஜ், வாஷிங் மெஷின் உள்ளிட்ட பயன்படுத்தும் பொருள்கள் அனைத்தும் நீரில் மூழ்கின. இதனால் சுமார் 3 லட்சம் வரை அவருக்கு இழப்பு ஏற்பட்டுள்ளது.

எனவே ஒட்டன்சத்திரம் வருவாய் துறையினர் மற்றும் மாவட்ட நிர்வாகம்போர்க்கால அடிப்படையில் உடனடியாக நடவடிக்கை எடுத்து அப்பகுதியில் உள்ள மக்களுக்கு பாதுகாப்பான சூழ்நிலையை ஏற்படுத்தித் தருமாறு கோரிக்கை விடுத்துள்ளனர்

Leave your comments here...