விருதுநகர் மாவட்டத்தில் மணல் திருட்டில் ஈடுபடுபவர்களுக்கு மாவட்ட எஸ்பி பெருமாள் எச்சரிக்கை

சமூக நலன்தமிழகம்

விருதுநகர் மாவட்டத்தில் மணல் திருட்டில் ஈடுபடுபவர்களுக்கு மாவட்ட எஸ்பி பெருமாள் எச்சரிக்கை

விருதுநகர் மாவட்டத்தில் மணல் திருட்டில் ஈடுபடுபவர்களுக்கு மாவட்ட எஸ்பி பெருமாள் எச்சரிக்கை

விருதுநகர் மாவட்டத்தில் மணல் திருட்டில் ஈடுபடுபவர்களுக்கு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பெருமாள் எச்சரிக்கை

விருதுநகர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் இன்று வெளியிட்ட பத்திரிக்கை செய்தியில் அவர் கூறியதாவது: விருதுநகர் மாவட்டத்தில் மணல், மண் மற்றும் கனிம வளங்களை திருடும் நபர்கள் மீது இந்திய தண்டனை சட்டம் பிரிவு 379 மற்றும் சுரங்கங்கள் ,கனிமங்கள் ஒழுங்குமுறை மற்றும் மேம்பாட்டு சட்டத்தின்படி கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரிக்கப்படுகிறது.

மணல் திருட்டில் ஈடுபடும் நபர்கள் பற்றி தகவல் தெரிவிக்க விருதுநகர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்களால் பிரத்தியேகமாக அறிமுகப்படுத்தப்பட்ட கைபேசி எண் 9150011000 என்ற எண்ணிற்கு வாட்ஸ்அப் மூலமாகவோ, குறுஞ்செய்தி மூலமாகவோ அல்லது அழைத்தோ தகவல் தெரிவிக்கலாம். அவ்வாறு தகவல் தெரிவித்து அவரின் ரகசியம் காக்கப்படும் மேலும் தொடர்ச்சியாக மணல் திருட்டில் ஈடுபடும் நபர்கள் மீது குண்டர் தடுப்பு சட்டத்தில் நடவடிக்கை எடுப்பதோடு மட்டுமல்லாமல் மணல் திருட்டில் ஈடுபடும் வாகனங்களை பறிமுதல் செய்து நீதிமன்றத்தில் ஒப்படைக்கப்படும் என விருதுநகர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பெருமாள் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

Leave your comments here...