வங்கக்கடலில் இந்திய-ர‌ஷிய கடற்படைகள் பயிற்சி – அதிர்ச்சியில் சீனா..!

இந்தியா

வங்கக்கடலில் இந்திய-ர‌ஷிய கடற்படைகள் பயிற்சி – அதிர்ச்சியில் சீனா..!

வங்கக்கடலில் இந்திய-ர‌ஷிய கடற்படைகள் பயிற்சி – அதிர்ச்சியில் சீனா..!

இந்தியா மற்றும் ர‌ஷியாவின் முப்படைகள் இணைந்து கடந்த 2005-ம் ஆண்டு முதல் அடிக்கடி பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றன. அந்தவகையில் இரு நாட்டு கடற்படைகளும் வருகிற 4 மற்றும் 5-ந்தேதிகளில் வங்கக்கடலில் மிகப்பெரிய பயிற்சியில் ஈடுபடுகின்றன.

இந்த பயிற்சிகளில் ர‌ஷியாவின் வினோகிராடோவ், டிரிபூட்ஸ், போரிஸ் புடோமா ஆகிய கப்பல்களும், ஹெலிகாப்டர் பிரிவும் பங்கேற்கின்றன. இதைப்போல இந்தியாவின் ரன்விஜய், ‌‌ஷயாத்ரி, கில்டன், சக்தி ஆகிய கப்பல்களும், பல்வேறு ஹெலிகாப்டர்களும் பயிற்சியில் இணைகின்றன. தரை, நீர், வான் இலக்குகளில் இருந்து வரும் அச்சுறுத்தலை எதிர்கொள்ளும் வகையில் பயிற்சிகள் நடைபெறுகின்றன.

இந்தியா-சீனா இடையே கிழக்கு லடாக்கில் மோதல் ஏற்பட்டு உள்ள நிலையில் இந்த போர் பயிற்சி நடைபெறுவது முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது. முன்னதாக ஜப்பான் மற்றும் அமெரிக்க கடற்படையினருடனும் முறையே கடந்த ஜூன் மற்றும் ஜூலை மாதங்களில் இந்திய கடற்படை பயிற்சியில் ஈடுபட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.

Leave your comments here...