மதுரை நகரில் உள்ள கோயில்களில் செப்.1.ல் ராகு-கேது பெயர்ச்சி விழா.!

ஆன்மிகம்

மதுரை நகரில் உள்ள கோயில்களில் செப்.1.ல் ராகு-கேது பெயர்ச்சி விழா.!

மதுரை நகரில் உள்ள கோயில்களில் செப்.1.ல் ராகு-கேது பெயர்ச்சி விழா.!

மதுரை நகரில் உள்ள ஆலயங்களில் செப். 1.ம் தேதி செவ்வாய்க்கிழமை ராகு- கேது பெயர்ச்சி விழா நடைபெறுகிறது.

ராகு பகவான் ரிஷப ராசிக்கும், கேது பகவான் விருச்சிக ராசிக்கும் செப்.1.ம் தேதி பெயர்வதையொட்டி, மதுரை மேலமடை மருதுபாண்டியர் தெரு அருகே அமைந்துள்ள சௌபாக்யா ஆலயத்தில் காலை 10.15.மணிக்கு ராகு-கேது ஃப்ரீதி ஹோமங்களும், சிறப்பு அபிஷேகமும், அர்ச்சணைகளும் நடைபெறுகிறது.

இதேபோல, மதுரை கோமதிபுரம், ஜூப்பிலி டவுன் அருள்மிகு ஞானசித்தி விநாயகர் ஆலயத்தில் செப்.1.ம் தேதி செவ்வாய்க்கிழமை மாலை 4.30 மணிக்கு ராகு-கேது பெயர்ச்சியையொட்டி, பரிஹார ஹோமங்களும், மேஷம், ரிஷபம், சிம்மம், துலாம், கும்பம், விருச்சிக ராசிநேயர்களுக்கு சிறப்பு அர்ச்சணைகள் நடைபெறும்.

இதேபோல, மதுரை அண்ணாநகர் பஸ்நிலையம் அருகே அமைந்துள்ள வைகை காலனியில் உள்ள வைகை விநாயகர் ஆலயத்திலும், ராகு- கேது பெயர்ச்சியை முன்னிட்டு, செப்.1.ம் தேதி செவ்வாய்க்கிழமை மாலை 6.35 மணிக்கு ராகு, கேதுவுக்கு பரிஹார ஹோமங்களும், அர்ச்சணைகளும் நடைபெறுகிறது.
அர்ச்சணைக்கு கோயிலில் முன்கூட்டியே பதிவு செய்ய வேனுமாய் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.
இதற்கான ஏற்பாடுகளை ஆலய நிர்வாகிகள் செய்து வருகின்றனர்.

Leave your comments here...