வசந்தகுமார் எம்பி உடல் சொந்த ஊரில் இன்று அடக்கம் – இறுதி ஊர்வலத்தில் ஏராளமானோர் பங்கேற்பு..!

அரசியல்

வசந்தகுமார் எம்பி உடல் சொந்த ஊரில் இன்று அடக்கம் – இறுதி ஊர்வலத்தில் ஏராளமானோர் பங்கேற்பு..!

வசந்தகுமார் எம்பி உடல் சொந்த ஊரில் இன்று அடக்கம் – இறுதி ஊர்வலத்தில் ஏராளமானோர் பங்கேற்பு..!

கன்னியாகுமரி தொகுதி, காங்., – எம்.பி.,மற்றும் தொழிலதிபர் வசந்தகுமார், 70; சைக்கிளில் சென்று வீட்டு உபயோக பொருட்களை விற்றவர், கடின உழைப்பால் உயர்ந்தவர். கடந்த 10-ந் தேதி கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டார். இதையடுத்து, சென்னை ஆயிரம் விளக்கு பகுதியில் உள்ள அப்பல்லோ ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டார்.

அவரது உடலில் கொரோனா தொற்றின் தாக்கம் அதிகரித்தது. இதனால் அவரது உடல்நிலை தொடர்ந்து கவலைக்கிடமாக இருந்து வந்தது. மேலும், அவர் நிமோனியா தொற்றாலும் பாதிக்கப்பட்டார். இந்த நிலையில் சிகிச்சை பலனின்றி எச்.வசந்தகுமார் நேற்று முன்தினம் மாலை உயிர் இழந்தார்.

எச்.வசந்தகுமார் உயிர் இழந்த அன்று காலை அவருக்கு கொரோனா பரிசோதனை நடத்தப்பட்டு இருந்தது. அந்த பரிசோதனையில் எச்.வசந்தகுமாருக்கு கொரோனா தொற்று இல்லை (நெகட்டிவ்) என்று முடிவு வந்தது. இதையடுத்து அவரது உடல் பொதுமக்கள் அஞ்சலிக்கு வைப்பதற்கான ஏற்பாடுகள் நடைபெற்றது. சென்னை தி.நகர் நடேசன் தெருவில் உள்ள அவரது இல்லத்தில் வசந்த குமார் உடல் பொதுமக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டது.

எச்.வசந்தகுமாரின் உடல் அவரது சொந்த ஊரான கன்னியாகுமரி மாவட்டம் அகஸ்தீஸ்வரத்தில் அடக்கம் செய்யப்படும் என்று அறிவிக்கப்பட்டு இருந்தது. எனவே, அவரது உடல் ஆம்புலன்ஸ் வாகனம் மூலம் சாலை மார்க்கமாக சென்னையில் இருந்து கன்னியாகுமரி மாவட்டம் அகஸ்தீஸ்வரம் எடுத்து செல்லப்பட்டது. நள்ளிரவு கொண்டு அகஸ்தீஸ்வரம் கொண்டு வரப்பட்ட வசந்தகுமார் உடலுக்கு பொதுமக்கள், அரசியல் கட்சியினர் என பல்வேறு தரப்பினர் அஞ்சலி செலுத்தினர். தொடர்ந்து, வசந்தகுமார் எம்.பி உடல் இறுதி ஊர்வலம் தொடங்கியது. இறுதி ஊர்வலத்தில் ஏராளமானோர் பங்கேற்றனர். கல்லறை தோட்டத்திற்கு ஊர்வலமாக எடுத்துச் செல்லப்படும் வசந்தகுமார் எம்.பி.உடல் அங்கு நல்லடக்கம் செய்யப்படுகிறது.

இன்று காலை கன்னியாகுமரி மாவட்ட கலெக்டர் பிரசாந்த் வடநேரே நேரில் சென்று மலர் மாலை வைத்து மரியாதை செலுத்தினார்.முன்னாள் அமைச்சர் பொன் ராதாகிருஷ்ணன் பல்வேறு கட்சிப் பிரமுகர்கள் காங்கிரஸ் கட்சியினர் பொதுஜனங்கள் இறுதி அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.

Leave your comments here...