சிஏஏ-விற்கு எதிராக போராட்டம் நடத்திய வழக்கில் கைதான சர்ஜில் இமாம் போலீஸ் காவல் 4 நாள் நீட்டிப்பு.!

இந்தியா

சிஏஏ-விற்கு எதிராக போராட்டம் நடத்திய வழக்கில் கைதான சர்ஜில் இமாம் போலீஸ் காவல் 4 நாள் நீட்டிப்பு.!

சிஏஏ-விற்கு எதிராக போராட்டம் நடத்திய வழக்கில் கைதான சர்ஜில் இமாம் போலீஸ் காவல் 4 நாள் நீட்டிப்பு.!

குடியுரிமைத் திருத்தச் சட்டத்துக்கு எதிராக, டில்லி ஷாகின்பாக் பகுதியில் நடந்த போராட்டத்தில், டில்லி ஜவஹர்லால் நேரு பல்கலையின் முன்னாள் ஆராய்ச்சி மாணவர் சர்ஜில் இமாம், பிரிவினையை துாண்டும் வகையில் பல்கலை. மாணவர்கள் மத்தியில், பேசியதாக, கடந்த ஜனவரியில் இவர் மீது 4 பிரிவுகளின் கீழ் என்.ஐ.ஏ. எனப்படும் தேசிய புலனாய்வு ஏஜென்சி போலீசார் தேசத் துரோக வழக்குப் பதிவு செய்து தேடி வந்தனர். தலைமறைவான அவரை பீஹார் மாநிலம், ஜெகனபாதில் கைது செய்தனர்.

தற்போது அசாம் மாநிலம் கவுகாத்தி மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.

இந்நிலையில் சர்ஜிலிடம் விசாரணை மேற்கொள்ள அனுமதிக்கக்கோரி புதுடில்லி நீதிமன்றத்தில் வீடியோ கான்பிரஸ் மூலம் போலீசார் ஆஜர்படுத்தினர். அப்போது சர்ஜில் இமாமை 5 நாட்கள் காவலில் எடுத்து விசாரிக்க அனுமதி தரவேண்டும் என போலீசார் நீதிமன்றத்தில் தெரிவித்தனர். 4 நாட்கள் காவலில் எடுத்து விசாரிக்க போலீசாருக்கு டில்லி நீதிமன்றம் அனுமதி வழங்கியது.

Leave your comments here...