வீடுகளில் திருடிய கும்பல் கைது.!

தமிழகம்

வீடுகளில் திருடிய கும்பல் கைது.!

வீடுகளில் திருடிய கும்பல் கைது.!

மதுரை மாநகர் கூடல்புதூர் காவல் நிலைய எல்கைக்குட்பட்ட பகுதிகளில் வீட்டை உடைத்து திருடும் வழக்குகள் தொடர்ந்து நடைபெற்று வந்ததால், குற்ற வழக்குகளில் தொடர்புடைய நபர்களை விரைவில் பிடிக்க காவல் துணை ஆணையர் குற்றப்பிரிவு பழனி குமார் உத்தரவிட்டார்.

அதன்படி, கூடல்புதூர் காவல் ஆய்வாளர் கதிர்வேல் தலைமையில் காவல் உதவி ஆய்வாளர் செந்தில்குமார், தலைமை காவலர் வேல்முருகன் முதல்நிலை காவலர்கள் செல்வகுமார் மற்றும் சதீஷ் ஆகியோர்கள் அடங்கிய தனிப்படை அமைக்கப்பட்டு குற்ற வழக்குகளில் ஈடுபட்ட நபர்களை தேடி வந்ததில், கடந்த ஆனையூர் கூடல்நகரில் வசிக்கும் மோகன் என்பவரின் மகன் அசோக் என்பவர் தனது வீட்டின் கதவை உடைத்து பீரோவில் இருந்த 4-1/2 பவுன் தங்க நகைகளும் பணம் ரூபாய் 24,000/- திருடு போய்விட்டதாக கூடல்புதூர் காவல் நிலையத்தில் கொடுத்த புகாரை பெற்று காவல் உதவி ஆய்வாளர் நாகராஜ் வழக்கு பதிவு செய்தார்.

அவ்வழக்கில்,ஈடுபட்ட தாக யுவராஜ் சிறார், தங்கபாண்டி 19, ஆகியோர்களை தனிப்படையினர் இன்று கைது செய்து அவர்களிடமிருந்து 3 பவுன் தங்க கட்டியை கைப்பற்றினார்கள். மேலும் , விளாங்குடி, ராமமூர்த்தி நகரில் வசிக்கும் ராமகிருஷ்ணன் என்பவரின் மகன் முனீஸ்வரன் என்பவர் அவரது வீட்டின் ஜன்னலை யாரோ உடைத்து பீரோவில் இருந்த 31 பவுன் தங்க நகைகள், 1.350கி.கி வெள்ளி மற்றும் பணம் ரூபாய் 5,000/- திருடிவிட்டதாக கூடல்புதூர் காவல் நிலையத்தில் கொடுத்த புகாரை பெற்று வழக்கு பதிவு செய்யம்பட்டு அவ்வழக்கில் ,ஈடுபட்ட நபர்களான (1) யுவராஜ் சிறார். கருப்பசாமி 19, இந்திரா 58, (யுவராஜின் தாயார்) லட்சுமி 36 ஆகியோரை தனிப்படையினர் இன்று கைது செய்து அவர்களிடமிருந்து, 24 1/2 பவுன் தங்க கட்டிகள், 1.45கி.கி வெள்ளி பொருட்களை கைப்பற்றினர்.

மேலும், ஆனையூர் கூடல்நகரில் வசிக்கும் அழகர்சாமி என்பவரின் மகன் பாஸ்கரன் என்பவர் அவரது வீட்டின் கதவை யாரோ உடைத்து பீரோவில் இருந்த பணம் ரூபாய் 70,000/- திருடு போய்விட்டதாக கூடல்புதூர் காவல் நிலையத்தில் கொடுத்த புகாரை பெற்று காவல் உதவி ஆய்வாளர் நாகராஜ் வழக்கு பதிவு செய்து, அவ்வழக்கில் ஈடுபட்டதாக யுவராஜ் , சூர்யா என்ற கேட்டு சூர்யா 19, ஆகியோர்களை தனிப்படையினர் இன்று கைது செய்து அவர்களிடமிருந்து ரூபாய் 45,000/-ம் கைப்பற்றினார்கள். கைது செய்யப்பட்ட யுவராஜ் சிறார் (2) தங்கபாண்டி (3) சூர்யா @ K2 சூர்யா,(4) லட்சுமி (5) இந்திரா (6) கருப்பு @ கருப்பசாமி ஆகிய ஆறு நபர்களும் நீதிமன்ற காவலுக்கு அனுப்பப்பட்டனர்.

Leave your comments here...