அருப்புக்கோட்டையில் ஆட்டோமேட்டிக் சானிடைசிங் மெஷின் தயாரித்து இலவசமாக வழங்கி வரும் பள்ளி மாணவிகள்..!

சமூக நலன்தமிழகம்

அருப்புக்கோட்டையில் ஆட்டோமேட்டிக் சானிடைசிங் மெஷின் தயாரித்து இலவசமாக வழங்கி வரும் பள்ளி மாணவிகள்..!

அருப்புக்கோட்டையில் ஆட்டோமேட்டிக் சானிடைசிங் மெஷின் தயாரித்து இலவசமாக வழங்கி வரும் பள்ளி மாணவிகள்..!

விருதுநகர் மாவட்டம், அருப்புக்கோட்டை தேவாங்கர் மகளிர் மேல்நிலைபள்ளி பள்ளி மாணவிகள் மூவர் ஆட்டோமேட்டிக் சானிடைசிங் மெஷின் தயாரித்து அதை அரசு மற்றும் பொதுமக்கள் பயன்பாட்டிற்க்கு இலவசமாக வழங்கி உள்ளனர்.

கொரோனாவில் இருந்து தங்களைப் பாதுகாத்துக் கொள்ள அரசு முகக்கவசம், கையுறை அணிந்து கைகளை அடிக்கடி சோப்பு போட்டு கழுவுதல் உள்ளிட்ட பல முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை செய்ய அறிவுறுத்தி வருகிறது. மருத்துவமனைகள் , அலுவலகங்கள் , கடைகளில் கை, கழுவுதல் பணியை ஆட்கள் இன்றி மெஷின் மூலம் செய்ய அருப்புக்கோட்டை தேவாங்கர் பெண்கள் மேல்நிலைப் பள்ளி மாணவிகள் ரம்யா, ஐஸ்வர்ய லட்சுமி, மதுமிதா ஆகியோர் ஆட்டோமேட்டிக் சானிடைசிங் மெஷின் தயாரிக்க முடிவு செய்தனர்.

அதன் படி வீட்டில் இருந்தபடியே இதற்கான முயற்சியில் ஈடுபட்டனர். பள்ளியில் அடல் ஆய்வக கருவிகளைக் கொண்டு இதை தயாரிக்க அடல் ஆய்வக பயிற்சியாளர் இந்துமதி வழிகாட்டுதலின்படி கையை நீட்டினால் தானாகவே சானிடைசர் விழும் வகையில் கண்டுபிடித்தனர். பொதுமக்கள் பயன்பெறும் வகையில் அருப்புக்கோட்டை அரசு மருத்துவமனை,காவல் நிலையம் மற்றும் நகராட்சி அலுவலகம் சென்று அதை அங்கு பொருத்தியுள்ளனர். தற்போது மக்கள் அதிகம் கூடும் இடமான அருப்புக்கோட்டை சார்நிலை கருவூலத்தில் இந்த இயந்திரத்தை பொறுத்தியுள்ளனர். அப்போது பள்ளியின் செயலாளர் கண்ணன் தலைமை ஆசிரியை தவமணி மற்றும் அடல் ஆய்வக பொறுப்பாளர் மனோன்மணி ஆகியோர் உடன் இருந்தனர். மாணவிகளின் கண்டுபிடிப்பு எல்லோரிடமும் பாராட்டை பெற்று வருகிறது.

Leave your comments here...