ஊரடங்கு காலத்தில் பிரதமரின் ஊழவர் நிதி திட்டம் மூலம் ஊழவர்களுக்கு 75,000 கோடி ரூபாய் நேரடியாக வங்கிகளில் டெபாசிட்..!

இந்தியா

ஊரடங்கு காலத்தில் பிரதமரின் ஊழவர் நிதி திட்டம் மூலம் ஊழவர்களுக்கு 75,000 கோடி ரூபாய் நேரடியாக வங்கிகளில் டெபாசிட்..!

ஊரடங்கு காலத்தில் பிரதமரின் ஊழவர் நிதி திட்டம் மூலம் ஊழவர்களுக்கு 75,000 கோடி ரூபாய் நேரடியாக வங்கிகளில் டெபாசிட்..!

பிரதமர் உழவர் உதவி நிதி திட்டம், உழவர்களுக்கு ஒரு வரப்பிரசாதம். இத்திட்டத்தின் கீழ் இதுவரை உழவர்களுக்கு 75,000 கோடி ரூபாய் வழங்கப்பட்டுள்ளது

நாடு முழுவதும், முழு பொதுமுடக்கக் காலத்தில் இருந்தபோதிலும் உழவர்கள் தன்னலமின்றிக் கடுமையாக உழைத்ததன் காரணமாக எத்தனையோ பிரச்சினைகள் இருந்த போதிலும் நாடு பட்டினி இல்லாமல் இருந்தது.

இந்தக் கடினமான காலங்களில் நாட்டின் உணவுப் பாதுகாப்பை உறுதி செய்ததற்காக உழவர்களின் பங்களிப்பைப் பிரதமர் பாராட்டியதில் வியப்பில்லை. கோவிட்-19 நோயைப் புறந்தள்ளி, உழவர்கள் கடினமாக உழைத்து நல்ல அறுவடை தந்ததால்,80 கோடிக்கும் அதிகமான மக்களுக்கு, மத்திய அரசு, இலவச ரேஷன் பொருள்கள் அளிக்க முடிந்தது. பிரதமர் உழவர் உதவி நிதித் திட்டத்தின் கீழ் 8.5 கோடி விவசாயக் குடும்பங்களின் வங்கிக் கணக்குகளில் 17,000 கோடி ரூபாய் செலுத்தப்படும் என்று 9 ஆகஸ்ட் அன்று பிரதமர் அறிவித்தார். முதல் தவணையாக 2000 ரூபாய் உழவர்களுக்கு ஏப்ரல் மாதமே அளிக்கப்பட்டுவிட்டது.

இதுவரை கடந்த ஒன்றரை ஆண்டு காலத்தில் பிரதமர் உழவர் உதவி நிதித் திட்டத்தின் கீழ், உழவர்களின் வங்கிக் கணக்குகளுக்கு 75,000 கோடி ரூபாய் நேரடியாக டெபாசிட் செய்யப்பட்டுள்ளது இத்திட்டத்தின் கீழ் உழவர்கள் ஒவ்வொருவருக்கும் மூன்று தவணைகளில் 2000 ரூபாய் என மொத்தம் 6000 ரூபாய் அளிக்கப்படும் சிறு, குறு விவசாயிகளுக்கு இது ஒரு வரப்பிரசாதமாக அமைந்துள்ளது. வேளாண்மை இயற்கையைச் சார்ந்ததாக இருப்பதால், உழவர்கள் தங்கள் செலவுகளைச் சமாளிக்க இத்தொகை உதவியாக இருக்கும். உழவர்களின் துன்பங்களைப் போக்குவதற்கு, குறிப்பாக பொது முடக்கக் காலத்தில் அவர்களுக்கு உதவுவதற்காக, மத்திய மாநில அரசுகள் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றன.

Leave your comments here...