இந்தியாவிற்குள் ஊடுருவ முயன்ற 5 பாகிஸ்தான் தீவிரவாதிகள் சுட்டுக்கொலை!

இந்தியா

இந்தியாவிற்குள் ஊடுருவ முயன்ற 5 பாகிஸ்தான் தீவிரவாதிகள் சுட்டுக்கொலை!

இந்தியாவிற்குள் ஊடுருவ முயன்ற 5 பாகிஸ்தான் தீவிரவாதிகள் சுட்டுக்கொலை!

இந்தியாவிற்குள் ஊடுருவ முயன்ற 5 பாகிஸ்தான் தீவிரவாதிகள் சுட்டுக்கொலை.பஞ்சாப் எல்லை வழியே இந்தியாவுக்குள் ஊடுருவ முயன்ற 5 பயங்கரவாதிகளை எல்லைப் பாதுகாப்புப் படையினர் சுட்டுக்கொன்றுள்ளனர்.

பஞ்சாபின் தார்ன் தாரனில் உள்ள சர்வதேச எல்லை அருகே இந்திய எல்லை பாதுகாப்புப் படையினர் இன்று காலை கண்காணிப்பில் ஈடுபட்டிருந்தனர். அப்போது பாகிஸ்தான் பகுதியிலிருந்து சிலர் இந்தியாவுக்குள் ஊடுருவ முயன்றதை கண்டுபிடித்துள்ளனர். அவர்களை இந்திய எல்லை பாதுகாப்புப் படையினர் எச்சரித்தபோது, அதை கண்டுகொள்ளாமல் ஊடுருவல்காரர்கள் துப்பாக்கியால் சுட்டதாக கூறப்படுகிறது.


இதையடுத்து இந்திய எல்லை பாதுகாப்புப் படையினர் நடத்திய தாக்குதலில் 5 பேர் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளனர்.இதன்மூலம் அங்கு நடைபெறவிருந்த ஊடுருவல் முயற்சி முறியடிக்கப்பட்டுள்ளது.

Leave your comments here...