ரோகித் சர்மா , மாரியப்பன் உட்பட 5 பேருக்கு “கேல் ரத்னா’ விருது..!

இந்தியாவிளையாட்டு

ரோகித் சர்மா , மாரியப்பன் உட்பட 5 பேருக்கு “கேல் ரத்னா’ விருது..!

ரோகித் சர்மா , மாரியப்பன்  உட்பட 5 பேருக்கு “கேல் ரத்னா’ விருது..!

இந்திய ஹாக்கி ஜாம்பவான் மேஜர் தயான் சந்த் பிறந்த நாளான ஆக. 29ம் தேதியை, தேசிய விளையாட்டு தினமான கொண்டாடப்படுகிறது. ஒவ்வொரு ஆண்டும் இந்நாளில், விளையாட்டுத்துறையில் சாதித்த இந்திய நட்சத்திரங்களுக்கு மத்திய அரசு சார்பில் ‘கேல் ரத்னா’, ‘அர்ஜுனா’ உள்ளிட்ட விருது வழங்கி கவுரவிக்கப்படும்.

கேல் ரத்னா விருதுக்கு தகுதியானவர்களைத் தேர்வு செய்யக் கடந்த செவ்வாய் கிழமை நிர்வாகிகள் கூட்டம் நடைபெற்றது. அதில், கிரிக்கெட் வீரர் ரோகித் சர்மா, ‘பாரா’ தடகள வீரர் மாரியப்பன் தங்கவேலு, பெண்கள் ஹாக்கி கேப்டன் ராணி ராம்பால், டேபிள் டென்னிஸ் வீராங்கனை மணிகா பத்ரா மற்றும் மல்யுத்த வீராங்கனை வினேஷ் போகத் ஆகியோரின் பெயர்களை விளையாட்டுத் துறை அமைச்சருக்குப் பரிந்துரைக்கப்பட்டது.

இதனை ஏற்றுக் கொண்ட மத்திய விளையாட்டு அமைச்சகம், அனைவருக்கும் ‘கேல் ரத்னா’ விருது அறிவித்தது. இதன்மூலம் முதன்முறையாக 5 பேருக்கு ‘கேல் ரத்னா’ விருது வழங்கப்படுகிறது.

Leave your comments here...