மான்கறி வைத்திருந்த ஒருவர் கைது..! நாட்டுத் துப்பாக்கி, மான்கறி பறிமுதல்.!

தமிழகம்

மான்கறி வைத்திருந்த ஒருவர் கைது..! நாட்டுத் துப்பாக்கி, மான்கறி பறிமுதல்.!

மான்கறி வைத்திருந்த ஒருவர் கைது..! நாட்டுத் துப்பாக்கி, மான்கறி பறிமுதல்.!

விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் அருகே உள்ள கணபதிசுந்தர நாச்சியார்புரம் பகுதியில், மணல் திருட்டு நடைபெறுவதாக சேத்தூர் ஊரக காவல் நிலைய உதவி ஆய்வாளர் செல்வத்திற்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது.

தகவலின் பெயரில் உதவிஆய்வாளர் செல்வம் மற்றும் காவல்துறையினர் மேற்குத் தொடர்ச்சி மலைப் பகுதியான, புல்பத்தி காட்டுப் பகுதியில் சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது ராஜபாளையத்தை சேர்ந்த அருண்குமார் ராஜா என்பவருக்கு சொந்தமான காட்டில் இருக்கும், சுண்ணாம்பு குவாரியை சோதனை செய்த போது புள்ளிமான் தோல், குளிர்சாதனப் பெட்டியில் நான்கு கிலோ மான்கறி, நாட்டுத்துப்பாக்கி ,மான்கொம்பு, வேட்டையாட பயன்படுத்தும் நெற்றி பட்டை டார்ச்லைட், மயில் கால்கள், கரடி பற்கள் முதலியவற்றை பறிமுதல் செய்தனர்.

மேலும் அங்கிருந்த கணபதிசுந்தர நாச்சியார்புரத்தைச் சேர்ந்த அய்யனார் மகன் பாலகிருஷ்ணன் (38), என்பவரை கைதுசெய்தனர். இராஜபாளையம் வடக்கு காவல் நிலைய ஆய்வாளர் பார்த்திபனிடம், பாலகிருஷ்ணனை ஒப்படைத்தனர். பின்பு காவல்துறையினர் திருவில்லிபுத்தூர் சரக வனத்துறையினரிடம் அவரையும், பிடிபட்ட மான்கறி, மான்கொம்பு உள்ளிட்டவற்றையும் ஒப்படைத்தனர். வனத்துறை அதிகாரிகள் பாலகிருஷ்ணன் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Leave your comments here...