அசாம் மாநிலத்துக்கு வெள்ள நிவாரண பணிகளுக்கு ரூ. 1 கோடி நிவாரண உதவி வழங்கிய பாலிவுட் நடிகர் அக்ஷய் குமார்.!

இந்தியாசமூக நலன்சினிமா துளிகள்

அசாம் மாநிலத்துக்கு வெள்ள நிவாரண பணிகளுக்கு ரூ. 1 கோடி நிவாரண உதவி வழங்கிய பாலிவுட் நடிகர் அக்ஷய் குமார்.!

அசாம் மாநிலத்துக்கு வெள்ள நிவாரண பணிகளுக்கு ரூ. 1 கோடி நிவாரண உதவி வழங்கிய பாலிவுட் நடிகர் அக்ஷய் குமார்.!

அக்ஷய் குமார் பல்வேறு விதங்களில் நன்கொடைகளையும் தொடர்ந்து அளித்து வருகிறார். கொரோனா வைரஸ் இந்தியாவில் அதிகம் பரவிய நேரத்தில் நிதி உதவி அளிக்கும் படி இந்திய அரசு கேட்டுக் கொண்ட நிலையில் PM Cares நிதிக்கு 25 கோடி ரூபாய் வழங்குவதாக அக்ஷய் குமார் அறிவித்திருந்தார். இவ்வளவு பெரிய தொகையை அளித்த ஒரே நடிகர் அக்ஷய் குமார் மட்டும் தான். இந்நிலையில் தற்போது இந்தியாவின் வட கிழக்கு மாநிலமான அசாம் வெள்ளத்தில் தத்தளித்து வரும் நிலையில் பல லட்சம் மக்கள் பாதிக்கப்பட்டு இருக்கிறார்கள். அவர்களுக்கு உதவும் விதமாக அக்ஷய் குமார் ஒரு கோடி ரூபாய் அசாம் அரசுக்கு வெள்ள நிவாரண நிதியாக வழங்கியிருக்கிறார்.

அசாமில் கடந்த ஜூலை மாதம் ஒரு வாரத்திற்கும் மேலாக பெய்த தொடர் கனமழையால், பிரம்மபுத்திரா உள்ளிட்ட 13 ஆறுகள் மற்றும் அதன் துணை ஆறுகளில் பெரும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இதனால் 30 மாவட்டங்களில் உள்ள சுமார் 3 ஆயிரம் கிராமங்கள் வெள்ளத்தில் சிக்கின. இதையடுத்து, அங்கு வசித்த மக்கள், நிவாரண முகாம்களில் தங்கவைக்கப்பட்டார்கள். சுமார் 50 லட்சம் போ் பாதிக்கப்பட்டார்கள். 80 போ் பலியாகியுள்ளனர்.

இந்நிலையில் அசாம் வெள்ள நிவாரண பணிகளுக்கு பிரபல பாலிவுட் நடிகர் அக்க்ஷய் குமார் ரூ. 1 கோடி நிதி வழங்கியுள்ளார்.


இது தொடர்பாக அம்மாநில முதல்-மந்திரி சர்பானந்தா சோனாவால் தனது டுவிட்டர் பதிவில்:-
அசாமின் இக்கட்டான நிலையில், வெள்ள நிவாரணத்திற்கு, நடிகர் அக்க்ஷய் குமார் தனது பங்களிப்பாக, ரூ. 1 கோடி வழங்கியதன் மூலம் அசாமின் உண்மையான நண்பனாக உள்ளீர்கள். இறைவன் அருளால் உங்களுக்கு நீண்ட ஆயுள் கிடைக்கட்டும் எனத் தெரிவித்துள்ளார்

Leave your comments here...