கன்னியாகுமரி : கந்தசஷ்டி கவசம் படித்து வீடுகள் தோறும் குழந்தைகள் முருகன் வேடமிட்டு வேல் பூஜை.!

Scroll Down To Discover
Spread the love

‘கருப்பர் கூட்டம்’ என்ற அமைப்பினர், தமிழ் கடவுள் முருகனை வேண்டி பாடும் கந்த சஷ்டி கவசத்தை கொச்சைப்படுத்தும் போக்கை கண்டித்து, தமிழகத்தில் உள்ள கோடிக்கணக்கான ஆன்மிக பக்தர்கள், முருக பக்தர்கள், காவடி குழுக்கள், பாதயாத்திரை குழுக்கள் வேண்டுகோளை ஏற்று, இன்று மாலை 6:01 மணிக்கு பக்தர்கள் அனைவரும் வீடுகள் தோறும், வேல் அல்லது முருகர் படத்தை வைத்து பூஜை செய்ய வேண்டும் என பா.ஜ., ஹிந்து அமைப்புகள், மடாதிபதிகள், துறவியர்கள், ஆதினங்கள் மற்றும் ஆன்மிக தலைவர்கள் வேண்டுகோள் விடுத்தனர்.

இதன்படி, தமிழகத்தில் ஏராளமானோர் தங்களது வீடுகளில் வேல் மற்றும் முருகர் படத்தை வரைந்து பூஜை செய்தனர். கந்த சஷ்டி பாராயணமும் செய்தனர்.
https://twitter.com/JananesaN_NewS/status/1292454647181893632?s=20
இதேபோல் குமரி மாவட்டத்தில் பல்வேறு ஊர்களில் இன்று குழந்தைகள் முருகன் வேடமிட்டு வேல் பூஜை செய்து கந்த சஷ்டி பாராயணமும் செய்தனர்.
https://twitter.com/HARIPRAKASH2224/status/1292455147579138049?s=20
https://twitter.com/Hariindic/status/1292463173568667648?s=20


மேலும் டுவிட்டரில் #vel_pooja என்ற ஹேஷ்டேக் இந்திய அளவில் முதலிடம் பிடித்தது.

செய்தி: Sakthi Aathira