சிறுமிக்கு காதல் கடிதம் கொடுத்த 66வயது தாத்தா மீது பாய்ந்தது போக்சோ..!

Scroll Down To Discover
Spread the love

கோவை போத்தனூர் அருகே எனக்கு உன்னை பிடித்திருக்கிறது உனக்கு ஓகே வா என்று சிறுமிக்கு காதல் கடிதம் கொடுத்த வயதான முதியவரை போக்சோ சட்டத்தில் போலீசார் கைது செய்தனர்.

கோவை அடுத்த போத்தனூர் அருகே பஜன கோயில் தெருவில் வசிப்பவன் முகமது பீர்பாஷா (வயது 66). இதே பகுதியில் வசித்து வரும் 16 வயது சிறுமியை தவறான கண்ணோட்டத்தில் பார்த்து வந்துள்ளான்.அந்த 16 வயது சிறுமியிடம், ‘எனக்கு உன்னை பிடிச்சிருக்கு, உனக்கு ‘ஓகே’ வா’ என எழுதி, காதல் கடிதம் கொடுத்துள்ளார். பெற்றோரிடம் சிறுமி கூறியுள்ளார். பெற்றோர், முதியவரின் வீட்டில் சென்று கண்டித்துள்ளனர்.

இதனால், ஆத்திரமடைந்த அந்த முதியவர், சில நாட்களுக்கு பின், மீண்டும் சிறுமியிடம் காதல் வசனம் பேசி, மிரட்டியுள்ளார். இதனைத்தொடர்ந்து பயந்த சிறுமி வீட்டை விட்டு வெளியே வராமல் இருந்துள்ளார். இதுதொடர்பாக அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் பெற்றோர் தரப்பில் புகார் செய்யப்பட்டதையடுத்து, விசாரித்த போலீசார், முதியவரை கைது செய்தனர்.தொடர்ந்து, அனைத்து மகளிர் கிழக்கு போலீஸ் ஸ்டேஷனுக்கு, வழக்கு மாற்றப்பட்டது. போக்சோ சட்டத்தில், வழக்கு பதிவு செய்யப்பட்டது. மாஜிஸ்திரேட் முன் ஆஜர்படுத்தப்பட்ட முதியவர், சிறையிலடைக்கப்பட்டார்.