அமைச்சர் ராஜேந்திர பாலாஜி இசட் பிளஸ் பாதுகாப்பு வழங்கிட வேண்டும் – இந்து மக்கள் கட்சி தலைவர் அர்ஜூன் சம்பத் கோரிக்கை..!

Scroll Down To Discover
Spread the love

தமிழக பால்வளத்துறை அமைச்சர் மாண்புமிகு ராஜேந்திர பாலாஜி அவர்களுக்கு மத்திய மாநில அரசுகளின் சார்பில் (Z Plus) சிறப்பு போலீஸ் கமோண்டா பாதுகாப்பு வழங்கிட வேண்டி கோரிக்கை விடுத்து உள்ளார் இந்து மக்கள் கட்சி தலைவர் அர்ஜூன் சம்பத்.

இது குறித்து அவர் வெளியிட்ட அறிக்கையில்:-  தமிழகத்தில் அ.தி.மு.க-வினர் மற்றும் இந்து இயக்கத் தொண்டர்களுக்கு எதிராக நடைபெறுகின்ற ஜிகாதிகளின் தாக்குதல் சம்பவங்கள் குறித்து உண்மை விவரங்களையும் கண்டனங்களையும் அமைச்சர் ராஜேந்திரபாலாஜி வெளிப்படையாக தெரிவித்து வருகிறார். தேனி நாடாளுமன்ற உறுப்பினர் திரு.ரவீந்திரநாத் அவர்கள் அவரது தொகுதியில் மக்களை சந்திக்கச் செல்லும் போது இஸ்லாமிய மத அடிப்படைவாதிகளால் தாக்கப்பட்டார். சிவகாசியில் எட்டு வயது இந்து சிறுமி அசாம் மாநிலத்தைச் சார்ந்த இஸ்லாமிய மத அடிப்படைவாதியால் கற்பழித்து கொள்ளப்பட்டுள்ளார். திருச்சியில் இந்திய குடியுரிமைச் சட்டத்தை ஆதரித்து பிரச்சாரம் செய்த பா.ஜ.க. பிரமுகர் விஜயரகு இஸ்லாமிய மத அடிப்படைவாதிகளால் படுகொலை செய்யப்பட்டுள்ளார் .

இத்தகைய வன்முறைகளை எதிர்த்து துணிச்சலாக அமைச்சர் ராஜேந்திரபாலாஜி அவர்கள் கருத்துக்களை தெரிவித்து வருகிறார். இதன் காரணமாக இஸ்லாமிய மத அடிப்படைவாத இயக்கங்களும் பாகிஸ்தான் ஆதரவு பெற்ற பயங்கரவாதிகளாலும் அமைச்சர் ராஜேந்திரபாலாஜியின் உயிருக்கு ஆபத்து ஏற்பட்டுள்ளது.
மேலும் வெளிப்படையாகவே அமைச்சரை கொன்று விடுவோம் என்று பயங்கரவாத அமைப்புக்கள் பேசியும் எழுதியும் வருகின்றனர். தி.மு.க. கம்யூனிஸ்ட் உள்ளிட்ட அமைப்புக்கள் அரசியல் காரணங்களுக்காகவும் முஸ்லீம் ஓட்டு வங்கிக்காகவும் பயங்கரவாதிகளை ஆதரித்து வருகிறார்கள். அமைச்சருக்கு எதிராக பேசி வருகிறார்கள். கன்னியாகுமரி காளியக்காவிளையில் காவல்துறை அதிகாரி வில்சன் இஸ்லாமிய பயங்கரவாதிகளால் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளார்.

எனவே அமைச்சர் ராஜேந்திர பாலாஜி அவர்களுக்கு மத்திய மாநில அரசுகள் இணைந்து பாதுகாப்பை பலப்படுத்திட வேண்டும். கருப்பு பூனை படை பாதுக்காப்பு வழங்கிட வேண்டும் என்றும் (Z Plus) சிறப்பு போலீஸ் கமோண்டா பாதுகாப்பு வழங்கிட வேண்டுமென கூறியுள்ளார்..!