திருவள்ளுவர் மண்ணிலிருந்து கேட்கிறேன், திமுக ஏன் பாகிஸ்தானை ஆதரிக்கிறது..? மத்திய அமைச்சர் ஸ்மிருதி இரானி

Scroll Down To Discover
Spread the love

மதுரையில் இன்று நடைபெற்ற குடியிரிமை சட்டம் குறித்த விளக்க கூட்டத்தில் மத்திய பெண்கள் மேம்பாட்டுத்துறை மற்றும் ஜவுளித்துறை அமைச்சர் ஸ்மிருதி இரானி கலந்து கொண்டார்.

அப்போது பேசிய அவர்:- திமுகவிற்கு இந்துக்களை பிடிக்காது என்றும், காங்கிரஸ் காரர்களுக்கு சீக்கியர்களை பிடிக்காது என்று கூறினார். ஆனால், இவர்களுக்கு மத்திய அரசு, குடியுரிமை சட்டத்தில் அங்கீகாரம் வழங்கப்பட்டிருப்பதாக தெரிவித்தார். இலங்கை தமிழர்களுக்காக, மனிதாபிமான அடிப்படையில் கூட திமுக செயல்படவில்லை.

திருவள்ளுவர் மண்ணிலிருந்து கேட்கிறேன், திமுக ஏன் பாகிஸ்தானை ஆதரிக்கிறது.? வரலாற்றுப் பிழைகளை சரி செய்யும் பணிகளை மத்திய அரசு செய்யும் என்பதை உறுதியாக கூறுகிறேன். குடியுரிமை திருத்த சட்டத்தை நிறைவேற்றி மகாத்மாகாந்தியின் விருப்பத்தை பிரதமர் மோடி நிறைவேற்றியுள்ளார். காங்கிரசும், திமுகவும் குடியுரிமை திருத்த சட்டம் இந்துக்களுக்கு மட்டுமே என தவறான தகவலை பரப்பிவருவதாக ஸ்மிருதி இரானி குற்றம்சாட்டினார்.