வெள்ள நிவாரணம்… நெல்லை, தூத்துக்குடி மக்களுக்கு ரூ. 6,000.. குமரி, தென்காசி மக்களுக்கு ரூ.1,000 – முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு!

Scroll Down To Discover
Spread the love

நெல்லை, தூத்துக்குடி மாவட்டத்தில் வெள்ள பாதிப்புகளை ஆய்வு செய்யவும், பாதிக்கப்பட்டவர்களுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கவும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று தூத்துக்குடி வந்தார்.

தூத்துக்குடி புனித மரியன்னை ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் அமைக்கப்பட்டுள்ள முகாம்களுக்கு சென்று, அங்கு தங்க வைக்கப்பட்ட மக்களிடம் பாதிப்பு விவரங்களை கேட்டறிந்தார். தொடர்ந்து வெள்ள பாதிப்பு பகுதிகளை ஆய்வு செய்து நிவாரணப் பொருட்களை வழங்கினார்.

இந்நிலையில், நெல்லை மற்றும் தூத்துக்குடியில் வெள்ள பாதிப்பு நிவாரணமாக 6000 ரூபாய் வழங்கப்படும் என முதலமைச்சர் ஸ்டாலின் அறிவித்தார்.

தென்காசி, கன்னியாகுமரி மாவட்டங்களில் அனைத்து குடும்ப அட்டைதாரர்களுக்கு ரூ.1,000 நிவாரணம் வழங்கப்படும். பாதிக்கப்பட்ட விவசாய நிலம் ஹெக்டேருக்கு ரூ.17,000 வழங்கப்படும். பாதிக்கப்பட்ட குடிசை வீடுகளுக்கு வழங்கப்படும் இழப்பீடு ரூ.10,000 ஆக உயர்த்தி வழங்கப்படும் என தெரிவித்தார்.