15 வயது சிறுமிக்கு பாலியல் தொந்தரவு – கிறிஸ்தவ மதபோதகரும் அவரது மனைவியும் போக்சோவில் கைது..!

Scroll Down To Discover
Spread the love

சென்னை ஆதம்பாக்கத்தில் உள்ள கிறிஸ்தவ தேவாலயத்தில் கடந்த 4 வருடங்களாக இலங்கையை சேர்ந்த ஷெரால்டு மனோகர் பாதிரியாராக இருந்துள்ளார். பாதிரியார் ஷெரால்டு மற்றும் அவரது மனைவி மீது மூதாட்டி ஒருவர் தனது பேத்திக்கு பாதிரியார் பாலியல் தொந்தரவு கொடுப்பதாக மடிப்பாக்கம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.

புகாரின் அடிப்படையில் வழக்கு பதிவு செய்த போலீசார் பாதிரியாரிடம் பாதிக்கப்பட்ட சிறுமியிடமும் விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில் கடந்த 6 மாதங்களாக சிறுமிக்கு செல்போன் மூலமாகவும் நேரிலும் பாலியல் தொல்லை கொடுத்து வந்தது தெரியவந்துள்ளது. மேலும் அவருக்கு உடந்தையாக இருந்த கிறிஸ்தவ பாதிரியாரின் மனைவியையும் போலீசார் போக்சோ சட்டத்தில் கைது செய்தனர்.

போக்சோ சட்டத்தில் கைதான இருவர் மீதும் வழக்கு பதிவு செய்த மடிப்பாக்கம் அனைத்து மகளிர் போலீசார், இருவரையும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்துள்ளனர். மேலும் கிறிஸ்தவ தேவாலயத்திற்கு வரும் பல சிறுமிகளுக்கும் பெண்களுக்கும் பாதிரியார் பாலியல் தொல்லை கொடுத்ததும் தெரியவந்ததாக போலீசார் தெரிவித்தனர்.