பத்ரிநாத் கோவிலுக்கு முகேஷ் அம்பானி ரூ.5 கோடி நன்கொடை..!

Scroll Down To Discover
Spread the love

பிரபல தொழிலதிபர் முகேஷ் அம்பானி கடந்த சில வாரங்களாக ராஜஸ்தான் மாநிலத்தில் பிரசித்தி பெற்ற ஸ்ரீநாத்ஜி கோயில் சென்று சாமி தரிசனம் செய்தார். ஆந்திரா சென்று அங்கு திருப்பதி வெங்கடாஜலதிபதி கோயிலில் சாமி தரிசனம் செய்ததுடன், திருப்பதி தேவஸ்தானத்திற்கு ரூ.1.5 கோடி நன்கொடை வழங்கினார். தொடர்ந்து கேரளாவில் குருவாயூர் கோயிலில் பிரசித்தி பெற்ற ஸ்ரீகிருஷ்ணர் கோயிலில் சாமி தரிசனம் செய்தார்.

இந்நிலையில் உத்தர்கண்ட் மாநிலத்தில் உள்ள உலக புகழ்பெற்ற பத்ரிநாத் கோயிலில் சாமி தரிசனம் செய்தார். பின்னர் கோயில் வளர்ச்சிக்கு ரூ. 5 கோடி நன்கொடையும் வழங்கினார். முன்னதாக டேராடூன் விமான நிலையம் வந்திறங்கி முகேஷ் அம்பானியை கோயில் நிர்வாகிகள் வரவேற்றனர். .