வகுப்பில் ஆபாச பாடம் நடத்திய அரசு பள்ளி ஆசிரியர் கிறிஸ்து தாஸ் போக்சோவில் கைது..!

Scroll Down To Discover
Spread the love

கன்னியாகுமரி மாவட்டம் இரணியல் அரசு மேல்நிலைப்பள்ளியில் அக்கவுண்டன்சி வகுப்பில் ஆசிரியர் ஆபாச பாடம் நடத்தியவரை குளச்சல் அனைத்து மகளிர் போலீசார் கைது செய்தனர்.

கன்னியாகுமரி மாவட்டம் இரணியல் பகுதியில் அரசு மேல்நிலைப் பள்ளி இயங்கி வருகிறது. இந்த பள்ளியில் 1-ம் வகுப்பு முதல் 12-ம் வகுப்பு வரை சுமார் 1500-க்கும் மேற்பட்ட மாணவ-மாணவியர்கள் பயின்று வருகின்றனர்
இந்த நிலையில் அந்த பள்ளியில் அக்கவுண்டன்சி பிரிவில் 11-ம் மற்றும் 12-ம் வகுப்பிற்கு, பாடம் நடத்தும் ஆசிரியர் கிறிஸ்து தாஸ் என்பவர் வகுப்பறையில் மாணவ, மாணவிகளுக்கு ஆபாச வகுப்பு நடத்தி வந்ததார்.

சம்பவம் குறித்து மாணவிகள் தங்கள் பெற்றோரிடம் தெரிவித்த நிலையில், இது குறித்து சில மாணவிகள் குளச்சல் அனைத்து மகளிர் போலீஸ் ஸ்டேஷனில் புகாரளிக்கப்பட்டு ஆசிரியர் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.

இந்த நிலையில் கடந்த 6-ம் தேதி பள்ளிக்கு வந்த மாணவிகளின் பெற்றோர் மற்றும் உறவினர்கள் பள்ளி தலைமை ஆசிரியர் அறையை முற்றுகையிட்டு ஆசிரியர் மீது நடவடிக்கை எடுக்க கேட்டு வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

ஆனால் ஆசிரியர் மீது எந்த நடவடிக்கையும் எடுக்காத நிலையில், நேற்று மாணவர்கள் மற்றும் பெற்றோர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் ஆசிரியர் மீது நடவடிக்கை எடுக்க கோரி புகார் அளித்தனர். இந்த நிலையில் ஆசிரியர் கிறிஸ்துதாஸ் மீது போக்சோ உள்ளிட்ட இரு பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்த, குளச்சல் அனைத்து மகளிர் போலீசார் கைது செய்தனர்