தி.க. தலைவர் கி.வீரமணிக்கு நன்றி தெரிவித்த மதுரை ஆதீனம் -எதற்கு தெரியுமா..?

Scroll Down To Discover
Spread the love

யாருக்கும் தெரியாமலிருந்த பட்டினப்பிரவேசத்தை உலகறியச் செய்த தி.க. தலைவர் கி.வீரமணிக்கு நன்றி தெரிவித்துள்ள மதுரை ஆதீனம், மடங்களில் பாஜக, இந்து கட்சிகள் தலையீடு இருப்பதை பற்றி யார் என்ன சொன்னாலும் தனக்கு கவலையில்லை என்றும் கூறியுள்ளார்.

தருமபுரம் ஆதீனம் மடத்தின் பட்டின பிரவேச நிகழ்வுக்கு விதிக்கப்பட்டிருந்த தடை நீக்கப்பட்டுள்ள நிலையில், மதுரை ஆதீனம் ஹரிஹர தேசிக பரமாச்சாரியர் மடத்தில் மக்களுக்கு இனிப்பு வழங்கி கொண்டாடினார். பட்டின பிரவேசம் என்றால் என்னவென்றே தெரியாமல் இருந்த நிலையில், அதை சர்ச்சையாக்கி இப்போது உலகறியச் செய்த திராவிட கழக தலைவர் கி.வீரமணிக்கு நன்றியும் வாழ்த்துக்களும் என மதுரை ஆதீனம் தெரிவித்துள்ளார்.

முன்னதாக செய்தியாளர்களை சந்தித்த அவர் , ஆதீன மடங்களின் சமய, சம்பிரதாயங்களை பாதுகாக்க வேண்டும் என்றும், எல்லோரையும் அனுசரித்து போக வேண்டும் என அரசை கேட்டுக் கொள்கிறேன்.பட்டின பிரவேசம் என்றால் என்னவென்றே தெரியாமல் இருந்த நிலையில், அதை சர்ச்சையாக்கி இப்போது உலகறியச் செய்த திராவிட கழக தலைவர் கி.வீரமணிக்கு நன்றியும் வாழ்த்துக்களும். அமைச்சர்கள் சாலையில் நடமாட முடியாது என மன்னார்குடி ஜீயர் தெரியாமல் சொல்லி விட்டார், இனிமேல் சொல்ல மாட்டார்.