புகழ்பெற்ற ராமாயண டி.வி. சீரியல் நடிகர் அருண்கோவில் இணைந்தார்..!

Scroll Down To Discover
Spread the love

1987-ல் தூர்தர்ஷன் தொலைக்காட்சியில், ஞாயிறு தோறும் ஒளிரப்பான ‘ராமாயணம்’ சீரியலில் ராமராக நடித்து புகழ்பெற்றவர் நடிகர் அருண் கோவில் ,63 முன்னர் காங். கட்சியில் இருந்த போது பல்வேறு தேர்தல்களில் பிரசாரத்திற்கு அருண்கோவிலை காங்., பயன்படுத்தி வந்தது.

இந்நிலையில் டில்லியில் பாஜக தலைமை அலுவலகம் வந்த அருண்கோவில், பாஜக எம்.பி. அர்ஜூன் சிங் முன்னிலையில், அக்கட்சியில் இணைந்தார். நடக்கவுள்ள 5 மாநில சட்டசபை தேர்தல்களில் குறிப்பாக மேற்குவங்க மாநிலத்தில் ஆட்சியை பிடிக்க பாஜக வியூகம் வகுத்து வரும் நிலையில் நடிகர் அருண்கோவிலை பிரசார களத்தில் இறக்கிட பாஜக திட்டமிட்டுள்ளது