இந்தியாவிற்குள் 400 பயங்கரவாதிகள் ஊடுருவல் – பாகிஸ்தானின் சதி திட்டம் அம்பலம்..!

Scroll Down To Discover
Spread the love

லடாக் எல்லையில் இந்தியாவுக்கும் சீனாவுக்கும் இடையே நிலவி வரும் பதற்றமான சூழலை பயன்படுத்தி இந்தியாவுக்குள் 400 பயங்கரவாதிகளை ஊடுருவச் செய்ய பாகிஸ்தான் முயற்சிப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.பாகிஸ்தான் ஏற்பாடு செய்துள்ள 400 பயங்கரவாதிகளும் இரு நாட்டு கட்டுப்பாட்டு எல்லைக்கு அருகே உள்ள முகாம்களில் இருப்பதாக கூறப்படுகிறது. இவர்களை இந்தியாவுக்குள் ஊடுருவச் செய்யும் வேலையில் பாகிஸ்தான் சிறப்பு படைப்பிரிவு செயல்பட்டு வருவதாக கூறப்படுகிறது.

பயங்கரவாதிகள் இந்தியாவுக்குள் ஊடுருவ ஏதுவாக போர் நிறுத்த ஒப்பந்தத்தை மீறி பாகிஸ்தான் ராணுவம் எல்லைப் பகுதியில் தொடர்ந்து துப்பாக்கிச்சூடு நடத்துவதாக உளவுத்துறை தெரிவித்துள்ளது.இது தவிர இந்திய பாதுகாப்பு படை மீது தாக்குதல் நடத்த எல்லை குழுக்களை பாகிஸ்தான் ஏற்பாடு செய்துள்ளது. பயங்கரவாதிகள் குரஜ், மச்சல், கெரான் தங்கார், நவுகம் பகுதிகளில் பதுங்கியுள்ளனர். புலனாய்வுத்துறை தகவல் தெரிவித்துள்ளது.

பாகிஸ்தான் ராணுவம் இந்திய பாதுகாப்புப் படையினர் மீதான தாக்குதல்களுக்காக பார்டர் ஆக்சன் டீம்-ஐ இறக்கியுள்ளது.இதற்கு இந்திய ராணுவமும் தகுந்த பதிலடி அளித்து வருகிறது