தமிழ் கடவுள் முருகனை போற்றும், கந்த சஷ்டி கவசத்தை, ஆபாசமாக விமர்சித்தவர்களை கண்டித்து, நாளை, வீடுகள்தோறும் ஆர்ப்பாட்டம் நடத்தப்படும்’ என, தமிழக பா.ஜ., தலைவர், முருகன் தெரிவித்துள்ளார்.
ஹிந்து மதத்தையும், ஹிந்து கடவுள்களையும் தரக்குறைவாக விமர்சித்து, சுரேந்திர நடராஜன் என்பவர், ‘கருப்பர் கூட்டம்’ என்ற, ‘யு டியூப்’ சேனலில் வெளியிட்டு வருகிறார். இவரது பின்னணியில், சமூக விரோத, தேச விரோத, ஹிந்து விரோத, அரசியல் கட்சிகள் செயல்படுகின்றன என்ற எண்ணம், அமைதியை விரும்பும், தமிழக மக்களுக்கு ஏற்பட்டுள்ளது.அவரை கைது செய்ய வலியுறுத்தி, பா.ஜ., நிர்வாகிகள் அனைவரும், அவரவர் வீடுகளுக்கு முன், 16ம் தேதி காலை, 10:30 மணிக்கு, முருகப்பெருமான் படம் மற்றும் கொடியுடன், கண்டன போராட்டம் நடத்த வேண்டும். இவ்வாறு, முருகன் கூறியுள்ளார்.
முருகனை போற்றும் கந்த சஷ்டி கவசத்தை ஆபாசமாக விமர்சித்தவர்களை கண்டித்து வீடுகள் தோறும் ஆர்ப்பாட்டம்
நாளை மறுநாள் வியாழக்கிழமை காலை 10.30 மணிக்கு முருகப் பெருமான் படத்துடனும், கொடியுடனும் தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி, அறவழி கண்டனப்போராட்டம்.
-@Murugan_TNBJP pic.twitter.com/wjB5sbpEnd
— BJP Tamilnadu (@BJP4TamilNadu) July 14, 2020

														
														
														
Leave your comments here...