ரூ.1.6 கோடி மதிப்புள்ள போதை மருந்து மாத்திரைகளை சென்னை விமான நிலைய சுங்கத்துறையினர் பறிமுதல்..!

தமிழகம்

ரூ.1.6 கோடி மதிப்புள்ள போதை மருந்து மாத்திரைகளை சென்னை விமான நிலைய சுங்கத்துறையினர் பறிமுதல்..!

ரூ.1.6 கோடி மதிப்புள்ள போதை மருந்து மாத்திரைகளை சென்னை விமான நிலைய சுங்கத்துறையினர் பறிமுதல்..!

சென்னை அயல்நாட்டு அஞ்சலகத்தில், பெல்ஜியம் மற்றும் நெதர்லாந்திலிருந்த வந்த இரண்டு பார்சல்களை, போதைப் பொருட்கள் இருக்கலாம் என்ற சந்தேகத்தின் பேரில் சென்னை விமான நிலைய சுங்கத்துறை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.

பெல்ஜியத்திலிருந்து வந்த பார்சல் முதலில் சோதனை செய்யப்பட்டது. இதில் செயற்கையான சிறுத்தைத் தோல் துணியும், பிற பொருட்களும் காணப்பட்டன. இந்தத் துணியைப் பிரித்து பார்த்தபோது ஒன்பது பொட்டலங்களில் ரெட் புலி, ஹெனகே என்ற பெயருள்ள ஆரஞ்சு வண்ண போதை மாத்திரைகள் இருந்தன.

மொத்தம் இருந்த 4060 மாத்திரைகளின் மதிப்பு ரூ.1.2 கோடியாகும். இந்த பார்சல் காஞ்சிபுர மாவட்டத்தில் உள்ள ஒரு கிராமத்தில் இருந்த ஒருவருக்கு அனுப்பப்பட்டிருந்தது. விசாரணையில், அது போலியான முகவரி என்பது தெரியவந்துள்ளது.நெதர்லாந்திலிருந்து வந்த பார்சலை பிரித்துப் பார்த்தபோது, அதில் மை பிராண்ட் எனப்படும் போதை மாத்திரைகள் பொட்டலங்களில் அடைத்து வைக்கப்பட்டிருந்தன. மொத்தம் 1150 மாத்திரைகளும், 100 கிராம் எம்டிஎம்ஏ கிறிஸ்டலும், ஒரு கிராம் மெத்தாகுவலோன் பொடியும் இருந்தது.

இவற்றின் மதிப்பு ரூ.45 லட்சமாகும். இந்தப் பார்சல் ஆந்திராவிலிருந்த ஒருவருக்கு அனுப்பப்பட்டிருந்தது. அவர், போதை மருந்து கடத்தலுக்காக ஏற்கனவே கைது செய்யப்பட்டுள்ளார் என்பது தெரிய வந்துள்ளது. இந்தப் பார்சல்களை கைப்பற்றிய சுங்கத்துறையினர் மேற்கொண்டு விசாரணை நடத்தி வருகின்றனர் என்று சென்னை சர்வதேச விமான நிலைய சுங்கத்துறை ஆணையராகம் தெரிவிக்கிறது.

Leave your comments here...