குடியரசுத் துணைத் தலைவராக வெங்கையா நாயுடு பதவியேற்று மூன்றாண்டு நிறைவு பெறுவதை ஒட்டி மத்திய பாதுகாப்பு அமைச்சர் புத்தகம் வெளியிடுகிறார்.!

இந்தியா

குடியரசுத் துணைத் தலைவராக வெங்கையா நாயுடு பதவியேற்று மூன்றாண்டு நிறைவு பெறுவதை ஒட்டி மத்திய பாதுகாப்பு அமைச்சர் புத்தகம் வெளியிடுகிறார்.!

குடியரசுத் துணைத் தலைவராக வெங்கையா நாயுடு பதவியேற்று மூன்றாண்டு நிறைவு பெறுவதை ஒட்டி மத்திய பாதுகாப்பு அமைச்சர் புத்தகம் வெளியிடுகிறார்.!

குடியரசுத் துணைத் தலைவர் வெங்கையா நாயுடு பொறுப்பேற்று மூன்றாண்டு நிறைவு பெறுவதை ஒட்டி மத்திய பாதுகாப்பு அமைச்சர் புத்தகமொன்றை வெளியிடுகிறார்.

இந்தியாவின் குடியரசுத் துணைத் தலைவர் திரு. எம். வெங்கையா நாயுடு பொறுப்பேற்று மூன்று ஆண்டுகாலம் நிறைவடைவதை ஒட்டி மத்திய பாதுகாப்பு அமைச்சர் திரு.ராஜ்நாத் சிங், குடியரசுத் துணைத் தலைவர் மாளிகையில் 11 ஆகஸ்ட் 2020 அன்று புதுதில்லியில் புத்தகம் ஒன்றை வெளியிடுகிறார். புத்தகத்தின் தலைப்பு “இணைத்தல் தொடர்பில் இருத்தல். மாறுதல்”

வெங்கையாநாயுடு குடியரசுத் துணைத் தலைவராக பொறுப்பேற்று மூன்று ஆண்டுகாலம் 11 ஆகஸ்ட் 2020 அன்று நிறைவடைகிறது. இந்தப் புத்தகத்தின் மின்பதிப்பை மத்திய தகவல் ஒலிபரப்புத்துறை அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் வெளியிடுகிறார். 250 பக்கங்களுக்கு மேல் கொண்ட இந்தப் புத்தகத்தை, மத்திய தகவல் ஒலிபரப்பு அமைச்சகத்தின் புத்தக வெளியீட்டுப்பிரிவு வெளியிடுகிறது.

குடியரசுத் துணைத் தலைவரின் இந்திய, வெளிநாட்டு பயணங்கள் உட்பட பல்வேறு செயல்பாடுகள் குறித்து படங்களுடனும், வார்த்தைகளுடனும் இந்தப் புத்தகம் விவரிக்கிறது. உழவர்கள், அறிவியலாளர்கள்,, மருத்துவர்கள் இளைஞர்கள், நிர்வாகிகள், தொழில்துறை தலைவர்கள், கலைஞர்கள் ஆகிய பலருடன் குடியரசுத் துணைத்தலைவர் கலந்துரையாடியது குறித்த செய்திகளும் இப்புத்தகத்தில் இடம் பெற்றுள்ளன.

குடியரசுத் துணைத் தலைவரின் வெளிநாட்டுப் பயணங்கள் குறித்தும், உலக தலைவர்களுடன் அவரது கலந்துரையாடல்கள் குறித்தும், பல்வேறு நாடுகளில் உள்ள இந்திய மக்களிடையே அவர் ஆற்றிய உரைகள் குறித்தும், இந்தப் புத்தகத்தில் பல்வேறு நிகழ்ச்சிகள் இடம் பெற்றுள்ளன.

மாநிலங்களவையின் பணிகளை மேலும் திறம்படச் செய்வதற்கான பல செயல்பாட்டு மாற்றங்களை வெங்கையா நாயுடு அறிமுகப்படுத்தினார். இந்த மாற்றங்களினால் மேலவையில் ஏற்பட்ட செயல்திறன் மேம்பாடு குறித்தும், இந்தப் புத்தகத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. புத்தகத்தின் இறுதி அத்தியாயத்தில் இந்த பெருந்தொற்று காலத்தில் குடியரசுத் துணைத் தலைவர் தமது நேரத்தை எவ்வாறு திறம்பட பயன்படுத்தினார் என்பது குறித்தும் குறிப்பிடப்பட்டுள்ளது. இந்தக் காலத்தில் “தொடர்பு கொள்வோம் இயக்கமாக” அவர் தனது நண்பர்கள், ஆசிரியர்கள், நீண்டகாலம் உடன் பணிபுரிந்தோர், பழைய நாட்கள் முதல் இன்றைய நாட்கள் வரை பழகியவர்கள், சமீபத்தில் பழகியவர்கள், உறவினர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள், ஆன்மீகத் தலைவர்கள், செய்தியாளர்கள் மற்றும் பிறருடன் தொடர்பில் இருந்தார் என்பது விவரிக்கப்பட்டுள்ளது.. மாநில முதல்வர்கள், ஆளுநர்கள், நாடாளுமன்றத்தின் இரு அவைகளின் பல்வேறு அரசியல் கட்சிகளின் தலைவர்கள், மாநிலங்களவையின் அனைத்து நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஆகியோருடனும் அவர் தொலைபேசி மூலம் உரையாடினார்.

Leave your comments here...