திருவில்லிபுத்தூர் பெரிய மாரியம்மன் கோவில் உண்டியல் திருட்டு…!

சமூக நலன்தமிழகம்

திருவில்லிபுத்தூர் பெரிய மாரியம்மன் கோவில் உண்டியல் திருட்டு…!

திருவில்லிபுத்தூர் பெரிய மாரியம்மன் கோவில் உண்டியல் திருட்டு…!

விருதுநகர் மாவட்டம் திருவில்லிபுத்தூரில் மிகப் பிரசித்தி பெற்ற பெரிய மாரியம்மன் திருக்கோயில் உள்ளது. வழக்கமாக தினமும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் இந்தக் கோவிலுக்கு வருவார்கள்.

இந்தக்கோவிலின் புகழ் பெற்ற, பூக்குழித் திருவிழாவின் போது தமிழகத்தின் பல பகுதிகளிலிருந்து, லட்சக்கணக்கான மக்கள் பூக்குழி இறங்குவார்கள். தற்போது வைரஸ் தொற்றுபரவல் காரணமாக, தமிழக அரசின் உத்தரவின் படி, இந்த பெரிய மாரியம்மன் கோவிலும் மூடப்பட்டுள்ளது. பொதுமக்களை கோவில்களுக்குள் அனுமதிக்காமல், அர்ச்சகர்கள் மட்டும் பூஜைகள் செய்வதற்கு மட்டும் கோவிலுக்குள் சென்று வருகின்றனர்.

இந்த பெரிய மாரியம்மன் கோவிலில் நான்கு இடங்களில், பக்தர்கள் காணிக்கை செலுத்துவதற்காக உண்டியல்கள் வைக்கப்பட்டுள்ளது. கோவிலுக்குள் ஆள்நடமாட்டம் இல்லாத நிலையில், நேற்று மர்ம ஆசாமிகள் கோவிலுக்குள் நுழைந்து, கோவிலில் இருந்த ஒரு உண்டியலை மட்டும் பெயர்த்து எடுத்து திருடிச் சென்றுவிட்டனர். உண்டியல் திருடப்பட்டதை பார்த்து அதிர்ச்சியடைந்த கோவில் நிர்வாகிகள், திருவில்லிபுத்தூர் நகர் காவல்நிலையத்தில் புகார் தெரிவித்தனர்.

கோவில் மற்றும் அருகிலுள்ள இடங்களில் பொருத்தப்பட்டுள்ள கண்காணிப்பு கேமராக்களின் பதிவுகளை போலீசார் ஆய்வு செய்து வருகின்றனர். பெரிய மாரியம்மன் கோவிலின் மிக அருகிலேயே தாலுகா காவல்நிலையமும், டிஎஸ்பி அலுவலகமும், போலீசார் குடியிருப்புகளும் இருக்கின்றன. போலீஸ் நடமாட்டம் எப்போதும் இருக்கும் பகுதியில், கோவிலுக்குள் புகுந்து உண்டியலை தூக்கிச்சென்ற சம்பவம் திருவில்லிபுத்தூரில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Leave your comments here...