கல்லிலே கோவில் மணி, சோழர் கால தொங்கும் விளக்கு, – சாதனை படைக்கும் திருப்பரங்குன்றம் கல் சிற்பி.முருகன்..! கண்டுகொள்ளுமா தமிழக அரசு…?

சமூக நலன்தமிழகம்

கல்லிலே கோவில் மணி, சோழர் கால தொங்கும் விளக்கு, – சாதனை படைக்கும் திருப்பரங்குன்றம் கல் சிற்பி.முருகன்..! கண்டுகொள்ளுமா தமிழக அரசு…?

கல்லிலே கோவில் மணி, சோழர் கால தொங்கும் விளக்கு, – சாதனை படைக்கும் திருப்பரங்குன்றம்  கல் சிற்பி.முருகன்..! கண்டுகொள்ளுமா தமிழக அரசு…?

கல்லிலே கோவில் மணி, சோழர் கால தொங்கும் விளக்கு, தொங்கும் செயினில் உள்ளே சுழலும் கல் உருண்டை என சாதனை படைக்கும் திருப்பரங்குன்றம் கல் சிற்பி. முருகன்.

திருப்பரங்குன்றத்தில் உள்ள கலைவாணி சிறப் கலைகூடத்தில் பழம் பெருமை வாய்ந்த கற்சிற்பங்களை புதிய தொழில் நுட்பம் மூலம் உருவாக்கும் கைவினைஞர்கள்.தமிழக அரசின் அங்கீகாரத்திற்கு காத்திருப்பு. ஊக்குவிக்குமா? தமிழக அரசின் தமிழ் மற்றும் கலை பண்பாட்டு துறை?

மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றம் தாலுகா பகுதியை சேர்ந்தவர் ஐயாக்குட்டி முருகன் வயது 56 இவர் பாரம்பரிய மற்றும் பரம்பரை சிற்ப கலைஞர் . இவரது கலைவாணி சிற்ப கலைக்கூடம் திருப்பரங்குன்றம் புறவழி சாலையில் அமைந்துள்ளது. இங்கு 20-க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் பணிபுரிந்து வருகின்றனர்.

முருகனின் அயராத உழைப்பால் பழம்பெருமை பேசும் வகையில் புதிய தொழில்நுட்பத்துடன் தொங்கும் ஒரே கல்லில் ஆன சரவிளக்கு. இது போல் மற்றொரு தொங்கும் சரளத்தில் கீழே கல் உருண்டை சுழலும் வகையில் அமைக்கப்பட்டுள்ளது .மேலும் ஒரே கல்லில் மணி ஒன்று செய்யப்பட்டு அதன் உள் நாக்கும் பொருத்தப்பட்டுள்ளது. மிகவும் கடினமான வேலையை தனது புதிய தொழிநுட்பத்தின் மூலம் உருவாக்கி உள்ளார்.

இதுகுறித்து முருகன் கூறுகையில் தமிழக கலை மற்றும் பண்பாட்டில் சோழர் கால நாகரிகம் மிகவும் பெருமை வாய்ந்தது. அவர்கள் கட்டிய கற்கோபுரங்கள் உலகளாவிய பெருமை பெற்றுள்ளது. தஞ்சை பெரிய கோபுரம். ஜெயங்கொண்டம் ராஜராஜ சோழபுரம் ஆகியவற்றில் அமைந்துள்ள கற்சிலைகள் மிகவும் துல்லியமாக தொழில்நுட்பத்துடன் நமது பாரம்பரியத்தின் கலை வெளி உலகிற்கு தெரியும் வகையில் அமைக்கப்பட்டுள்ளது .

ஸ்ரீரங்கத்தில் உள்ள கோபுரங்கள் மற்றும் கோயில் சிற்பங்கள் இதற்கு எடுத்துக் காட்டாக உள்ளன. இதனை முன்மாதிரியாக வைத்து 3அடி உள்ள கல்லில் தொங்கும் சரவிளக்கு (செயின் விளக்கு) எங்களது கடின முயற்சியில் 4 அடி உயரமுள்ள விளக்கு தயாரித்துள்ளோம். இதனை படைப்பதற்கு மிகவும் சிரமாக இருந்தது. பல்வேறு கட்ட முயற்சிக்கு பின் பல கற்கள் உடைந்து பின்னர் உருவாக்கினோம். இதேபோல் தொங்கும் சரள குடுவையின் உள்ளே சூழலும் கற் உருண்டை இருக்குமாறு தயாரித்துள்ளோம். இதேபோல் ஒன்னே கால் அடி ( 15 “இன்ஞ் ) உயரமும், 1 அடி விட்ட முள்ள மணி ஒன்றும் உருவாக்கியுள்ளோம். இதனுள் மணியின் நாக்கு பகுதி பொருத்துவது மிகவும் கடினமான பணியாகும் அதனை முயற்சி செய்து வெற்றிகரமாக இதனை உருவாக்கியுள்ளோம்.

இதனால் எங்களுக்கு ஏகப்பட்ட பொருட் செலவு ஏற்பட்டது. இதெல்லாம் உருவாகியது நமது தமிழர்களின் கலை மற்றும் பண்பாட்டு வெளி உலகிற்கு தெரியும் வகையில் இதனை உருவாக்கியுள்ளோம். தமிழக அரசு எங்களுக்கு ஆக்கமும் ஊக்கமும் தந்து உதவி புரியவேண்டும் கற்கள் கிடைப்பதில் நிறைய சிரமங்கள் உள்ளன குவாரியில் இருந்து கற்கள் கிரஷர் ஜல்லிக்கு மற்றும் வெளி மாநிலங்களுக்கு ஏற்றுமதி செய்கின்றனர்.

இதனால் எங்களுக்கு கற்கள் கிடைப்பதில் தாமதம் ஏற்படுகிறது. அரசு இதற்கு உரிய நடவடிக்கை எடுத்து எங்களுக்கு கற்கள் கிடைப்பதில் உரிய நடவடிக்கை செய்து தருமாறும். நவீன தொழில் நுட்பத்தை பயன்படுத்தி மேலும் பல பழைய சிற்பங்களை புதிய தொழில்நுட்பத்துடன் உருவாக்க எங்களுக்கு வாய்ப்பு அளிக்குமாறும். உருவாக்கிய கற் சிற்பங்களை அரசின் பூம்புகார் நிறுவனம் மற்றும் தமிழக அரசின் கலை பண்பாட்டுத்துறை மூலம் விற்பனை செய்ய எங்களுக்கு உதவி செய்தால் அழிந்துகொண்டிருக்கும் இந்த கலை மேலும் வளர்ந்து பெருமை சேர்க்கும் திருப்பரங்குன்றம் கலைவாணி சிற்பக் கலைக்கூடம் .

Leave your comments here...