சென்னை விமான நிலையத்தில் 18.5 லட்சம் ரூபாய் மதிப்பிலான தங்கம் பறிமுதல்..!

இந்தியா

சென்னை விமான நிலையத்தில் 18.5 லட்சம் ரூபாய் மதிப்பிலான தங்கம் பறிமுதல்..!

சென்னை விமான நிலையத்தில் 18.5 லட்சம் ரூபாய் மதிப்பிலான தங்கம் பறிமுதல்..!

சென்னை விமான நிலைய சுங்கத்துறை அதிகாரிகளால் பயணிகளுடன் சேர்ந்து வராமல் தனித்து வந்த உடைமைகளுக்கான டெர்மினலில் 18.5 லட்சம் ரூபாய் மதிப்பிலான தங்கம் கைப்பற்றப்பட்டது.

சிறப்பு எச்சரிக்கை அடிப்படையில், சென்னை விமான நிலைய சுங்கத்துறை அதிகாரிகள் 18.5 லட்சம் ரூபாய் மதிப்புள்ள 388 கிராம் எடை கொண்ட தங்கத்தைக் கைப்பற்றினார்கள் பயணிகளுடன் சேர்ந்து அல்லாமல் தனித்து வந்த உடைமைகளுக்கான டெர்மினலில் துபாயிலிருந்து வந்தடைந்த பயணிகளின் தனிப்பட்ட உடைமைகளிலிருந்து இது கைப்பற்றப்பட்டது.

சென்னையைச் சேர்ந்த ஆர். சங்கர் என்பவர் (வயது 50)ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானம் ix1644 மூலமாக தனித்து வந்த தமது தனிப்பட்ட வீட்டு உபயோக பொருள்களை எடுத்துச் செல்வதற்காக விமான நிலையம் வந்திருந்தார். அவர் முன்னதாகவே துபாயிலிருந்து வந்து சேர்ந்து விட்டார். பொருள்களைப் பரிசோதித்த போது, பொம்மை கார் ஒன்றும் நான்கு கடிகாரங்களும் ஒரு பெட்டியில் இருந்தன. அவற்றைத் தூக்கியபோது அவை அளவுக்கு அதிகமாக எடை கொண்டதாக இருந்தன.


அந்த பொம்மைக் காரை திறந்து பார்த்த போது, அதற்குள்ளே ஒரு டிரான்ஸ்பார்மர் இருந்தது தெரியவந்தது. அதைப் பிரித்துப் பார்த்த போது அதில் பதிமூன்று தங்கத் தகடுகள் E வடிவத்திலும் 2 தங்கத் தகடுகள் I வடிவத்திலும் இருந்தன. கடிகாரங்களின் பின்பக்க மூடியை திறந்தபோது, தங்கத்தால் செய்யப்பட்ட மோதிரம் ஒவ்வொரு கடிகாரத்திலும் இருந்தது தெரியவந்தது. மொத்தம் 388 கிராம் 24 கேரட் தங்கம் கைப்பற்றப்பட்டது. இதன் மதிப்பு 18.5 லட்சம் ரூபாய். இவை சுங்க சட்டம் 1962 ன் படி பறிமுதல் செய்யப்பட்டன.

Leave your comments here...