இலங்கை தேர்தல் அபார வெற்றி பெற்று மீண்டும் பிரதமர் ஆகிறார் ராஜபக்ச ; முதல் வாழ்த்தே இந்திய பிரதமர்..!

இந்தியாஉலகம்

இலங்கை தேர்தல் அபார வெற்றி பெற்று மீண்டும் பிரதமர் ஆகிறார் ராஜபக்ச ; முதல் வாழ்த்தே இந்திய பிரதமர்..!

இலங்கை தேர்தல் அபார வெற்றி பெற்று மீண்டும் பிரதமர் ஆகிறார் ராஜபக்ச ; முதல் வாழ்த்தே இந்திய பிரதமர்..!

இலங்கையில், நேற்று முன்தினம் பார்லிமென்ட் தேர்தல் நடந்தது. மொத்தம் 22 மாவட்டங்களில், 225 இடங்களில், கட்சிகளுக்காக ஒதுக்கப்பட்ட இடங்களை தவிர்த்து, 196 இடங்களுக்கு ஓட்டுப்பதிவு நடைபெற்றது. கொரோனா வைரஸ் பரவும் நேரத்திலும், திட்டமிட்டபடி தேர்தலை நடத்துவதற்காக, பாதுகாப்பு மற்றும் சுகாதார ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன. ஓட்டுச் சாவடிகளில் தனிமனித இடைவெளி பின்பற்றப்பட்டது. வாக்காளர்கள் முக கவசம் அணிந்து வந்து ஓட்டளித்தனர். தேர்தலில் பதிவான ஓட்டுகளை எண்ணும் பணி, 64 மையங்களில் நேற்று துவங்கியது.

துவக்கத்திலிருந்தே, அதிபர் கோத்தபயா ராஜபக்சே, பிரதமர் மகிந்தா ராஜபக்சே குடும்பத்தினரின், இலங்கை மக்கள் கட்சி, அதிகமான இடங்களில் முன்னணியில் இருந்தது. சிங்களர்கள் அதிகமாக வசிக்கும் தெற்கு பகுதியில் பதிவான ஓட்டுகளில், 60 சதவீதத்துக்கும் மேலான ஓட்டுகளை பெற்று, இலங்கை மக்கள் கட்சி, அபார முன்னணியை பெற்றது. இறுதி கட்ட ஓட்டெடுப்பில், மொத்தம் 145 இடங்களை கைபற்றி ராஜபக்சே கட்சி அபார வெற்றி பெற்றது.கடந்த அதிபர் தேர்தலில் போட்டியிட்டு தோல்வி அடைந்த சஜித் பிரேமதாசா புதிதாக துவக்கிய ஐக்கிய மக்கள் சக்தி, 23.3% ஓட்டுக்களுடன் இரண்டாவது இடத்தை பிடித்துள்ளது. ரணில் விக்கிரமசிங்கேவின் ஐக்கிய தேசிய கட்சி, 3.84% ஓட்டுக்களும், தமிழ் தேசிய கூட்டமைப்பு 2.15% ஓட்டுகளும் பெற்று அடுத்தடுத்த இடங்களை பெற்றன. ஐக்கிய தேசிய கட்சிக்கு கடைசி இடமே கிடைத்தது.

இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்று பரவலால் இரு முறை ஒத்தி வைக்கப்பட்ட நாடாளுமன்ற தேர்தல், கடைசியில் நேற்று முன்தினம் நடைபெற்றது.


இதைத் தொடர்ந்து, மகிந்த ராஜபட்சவுக்கு இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி தொலைபேசியில் வாழ்த்து தெரிவித்துள்ளார். பிரதமர் மோடியின் வாழ்த்துக்கு ராஜபட்ச நன்றி தெரிவித்துள்ளார்.


இதுகுறித்து தனது டுவிட்டர் வலைப் பக்கத்தில், இலங்கை மக்களின் பெரும் ஆதரவுடன், இருநாடுகளுக்கு இடையிலான நீண்டகால உறவை மேலும் மேம்படுத்த உங்களுடன் இணைந்து பணியாற்ற எதிர்நோக்கியுள்ளதாகவும், இலங்கையும், இந்தியாவும் நட்புறவு நாடுகள் என்றும் ராஜபட்ச குறிப்பிட்டுள்ளார்

Leave your comments here...