500 ஆண்டு கால போராட்டத்தின் கனவு நனவானது – அயோத்தியில் ராமர் கோவிலுக்கு பிரதமர் மோடி அடிக்கல் நாட்டினார்..!

இந்தியா

500 ஆண்டு கால போராட்டத்தின் கனவு நனவானது – அயோத்தியில் ராமர் கோவிலுக்கு பிரதமர் மோடி அடிக்கல் நாட்டினார்..!

500 ஆண்டு கால போராட்டத்தின் கனவு நனவானது – அயோத்தியில் ராமர் கோவிலுக்கு பிரதமர் மோடி அடிக்கல் நாட்டினார்..!

அயோத்தியில் ராமர் கோவிலுக்கான பூமி பூஜையும், அடிக்கல் நாட்டு விழாவும் இன்று நடைபெற்றது. இந்த விழாவில் கலந்து கொள்வதற்காக காலை 9.30 மணியளவில் டெல்லியில் இருந்து சிறப்பு விமானம் மூலம் லக்னோ வந்த பிரதமர் அங்கிருந்து ஹெலிகாப்டர் மூலம் அயோத்தி வந்தார்.


அயோத்தி வந்ததும் பின்னர் கார் மூலம் ஹனுமன்கர்கி கோவிலுக்கு சென்ற பிரதமர் சிறப்பு வழிபாடு செய்தார். கோவிலுக்கு வந்த அவரை, நிர்வாகிகள் வரவேற்றனர். அவருடன் யோகியும் இருந்தார். தொடர்ந்து, ராமஜென்ம பூமியில் உள்ள குழந்தை ராமரை வழிபட்ட பிரதமர் மோடி, பூஜைகளையும் செய்தார். பின்னர், கோவில் வளாகத்தில் பாரிஜாத மலர்ச்செடியை நட்டு வைத்தார்.


இதையடுத்து, பூமி பூஜை நடைபெறும் இடத்திற்கு மோடி, யோகி ஆதித்யநாத் உள்ளிட்டோர் வருகை தந்தனர். தொடர்ந்து, வேத மந்திரங்கள் முழங்க பூமி பூஜை தொடங்கியது. இதில், மாஸ்க் அணிந்த படி பிரதமர் மோடி, யோகி ஆதித்யநாத் ஆகியோர் பங்கேற்றனர். இதையடுத்து, ராமர் கோவிலுக்கு பிரதமர் மோடி அடிக்கல் நாட்டினார். ரூ. 300 கோடி மதிப்பில் கட்டப்படும் இந்த கோவில் மூன்றரை ஆண்டுகளில் கட்டிமுடிக்க திட்டமிடப்பட்டுள்ளது.


அயோத்தியில் அமைய உள்ள ராமர் கோவில், ‘நாகர்’ கட்டடக் கலையின் அடிப்படையில் அமைகிறது. 5 குவி மாடங்களுடன், 161 அடி உயர கலச கோபுரத்துடன் அமையுள்ளது. இந்த கோவிலை வடிவமைத்து கட்டும் பொறுப்பை, குஜராத்தில் உள்ள சோம்நாத் ஆலயத்தை வடிவமைத்து கட்டிய பிரபாகர்ஜி சோம்புராவின் பேரன், அகமதாபாத்தை சேர்ந்த சந்திரகாந்த் பாய் சோம்புரா ஏற்றுள்ளார்.


இது குறித்து சந்திரகாந்த் பாய் தெரிவித்துள்ளதாவது: முதலில் 212 தூண்கள் உடன் 3 குவிமாடங்கள் மற்றும் 141 அடி உயர கலச கோபுரத்துடன் கோவிலை கட்ட தீர்மானித்தோம். அதற்கு ஏற்பவே அனைத்துப் பணிகளையும் இதுவரை மேற்கொண்டோம். உச்சநீதிமன்றத் தீர்ப்புக்குப் பின், போதிய இடம் கிடைத்துள்ளது. ராமர் பிறந்த இடத்தில் அமையவுள்ள இந்த வரலாற்று சிறப்பு மிக்க ஆலயத்தைப் பார்வையிட, உலகம் முழுவதும் இருந்து ஆயிரக்கணக்கான மக்கள் நாள்தோறும் வருவார்கள். அதற்கு ஏற்ப, கோவில் வரைபடத்தை மாற்றி அமைத்துள்ளோம். அதன்படி தற்போது, 360 தூண்களுடன் விசாலமான 5 குவி மாடங்களுடன், 161 அடி உயர கோபுர கலசத்துடன் அமைக்கப்பட உள்ளது. இவ்வாறு சந்திரகாந்த் பாய் சோம்புரா தெரிவித்தார்.

சந்திரகாந்த் பாய் சோம்புரா

கர்ப்ப கிரகத்தை விட எந்த ஒரு கட்டடமும் பெரியதாகி விடக் கூடாது என்ற சிற்பக்கலை மற்றும் வாஸ்து சாஸ்திர அடிப்படையில் இந்த கோவிலை கட்ட உள்ளோம்.பிரதான கோவிலை சுற்றி நான்கு சிறிய கோயில்கள் அமைக்கப்பட உள்ளது. கர்ப்பக்கிரகம், குடு மண்டபம், நிருத்ய மண்டபம், ரங்க மண்டபம், கீர்த்தனை மண்டபம் மற்றும் பிரார்த்தனை மண்டபம் ஆகியவை அமைக்கப்படவுள்ளன. பத்து ஏக்கரில் 3 தளங்களாக கோவில் அமைய உள்ள நிலையில், கோவில் வளாகம் 57 ஏக்கர் பரப்பளவில் அமைக்கப்பட உள்ளது. இதற்கான கற்கள் ராஜஸ்தான் மாநிலத்தில் உள்ள பன்ஷி மலையில் இருந்து கொண்டு வரப்பட உள்ளது.மூன்றரை ஆண்டுகளில் கோவிலை கட்டி முடிக்க திட்டமிடப்பட்டு உள்ளது.


நாடு முழுவதும் பல்வேறு மொழிகளில் ஸ்ரீராம் என எழுதப்பட்டு, கடந்த 30 ஆண்டுகளாக சேகரிக்கப்பட்ட செங்கல்கள் இந்த கோவிலின் அடித்தளத்திற்கு பயன்படுத்தப்பட உள்ளது, இதன் சிறப்பு அம்சமாகும். கோவில் படிக்கட்டுகள் 16 அடி அகலத்தில் அமைக்கப்பட உள்ளது. ரங்க மற்றும் நிருத்திய மண்டபங்கள் கடந்த காலங்களில், கோவிலில் பணியாற்றும் தேவதாசி பெண்கள் நடனமாட பயன்பட்ட நிலையில், தற்போது அவை, மூன்று பக்கமும் இருந்து பகவான் ராமரை தரிசிக்கும் வகையில் அமைக்கப்பட உள்ளது. இவ்வாறு சந்திரகாந்த் பாய் சோம்புரா தெரிவித்துள்ளார்.

Leave your comments here...