அயோத்தியில் ராமர் கோவில் : தேசிய அளவில் ட்ரெண்டிங் ஆகும் #JaiShriram ஹாஸ்டக்..!

இந்தியா

அயோத்தியில் ராமர் கோவில் : தேசிய அளவில் ட்ரெண்டிங் ஆகும் #JaiShriram ஹாஸ்டக்..!

அயோத்தியில் ராமர் கோவில் : தேசிய அளவில் ட்ரெண்டிங் ஆகும் #JaiShriram ஹாஸ்டக்..!

உத்தர பிரதேசம் மாநிலம் அயோத்தியில் சர்ச்சைக்குரிய நிலத்தில், ராமர் கோவில் கட்ட, உச்ச நீதிமன்றம் கடந்தாண்டு அனுமதி வழங்கியது. கோவில் கட்டுவதற்காக, மத்திய அரசு, ‘ஸ்ரீ ராமஜன்மபூமி தீர்த்த ஷேத்ரா’ என்ற பெயரில், அறக்கட்டளையை அமைத்தது.

இந்நிலையில், அயோத்தியில் கோவில் கட்டுவதற்கான அடிக்கல் நாட்டு விழா, இன்று காலை நடக்கிறது. இதையொட்டி, அயோத்தி மாவட்டம் முழுவதும், விழாக்கோலம் பூண்டுள்ளது. அடிக்கல் நாட்டு விழாவை முன்னிட்டு, பூமி பூஜைக்கான சடங்குகள், அயோத்தியில் இரு நாட்களுக்கு முன்னரே துவங்கின. இதற்காக, வாரணாசியிலிருந்து வேதவிற்பன்னர்கள் வரவழைக்கப்பட்டுள்ளனர்.விழாவில் பங்கேற்பதற்காக, பிரதமர் நரேந்திர மோடி, டில்லியிலிருந்து, காலை 9:35 மணிக்கு சிறப்பு விமானத்தில் புறப்பட்டு, லக்னோவுக்கு செல்கிறார். அங்கிருந்து ஹெலிகாப்டர் மூலம், அயோத்தி செல்கிறார். முதலில், ஹனுமன்கர்கி கோவிலுக்கு சென்று சிறப்பு வழிபாடு செய்கிறார். அடுத்து, 12:00 மணிக்கு, ராம ஜன்மபூமிக்கு செல்கிறார். பகல், 12:40 மணிக்கு, கோவில் கருவறை அமைய உள்ள இடத்தில், 40 கிலோ வெள்ளியால் செய்யப்பட்ட செங்கல்லை வைத்து அடிக்கல் நாட்டுகிறார்.

இந்நிலையில் ட்விட்டரில் இந்திய அளவில் #JaiShriRam, RamMandir ஹாஸ்டக் ட்ரெண்ட் ஆகினாலும், தமிழக அளவில் இராவணன்பூமி போன்ற ஹாஸ்டாகுகள் ட்ரெண்ட் ஆகி வருகின்றன.ராமர்-ராவண யுத்தம் ராமாயண கதையின் முக்கிய அம்சமாகும். அதில் ராமர் இலங்கைக்கு சென்று ராவணனை அழித்து சீதையை மீட்டு வருவதாக இருக்கும். மேலும் ராமர் கடவுள் விஷ்ணுவின் அவதாரமாக நம்பப்படுவதால் ராமர் கடவுளாக கொண்டாடப் படுகிறார்.

Leave your comments here...