தேவேந்திர குல இனமக்களின் வாக்குகளை திராவிட கட்சிகள் புறக்கணிக்கிறதா..? தேவேந்திரர் தன்னார்வ அறக்கட்டளை தலைவர் கேள்வி..?

அரசியல்தமிழகம்

தேவேந்திர குல இனமக்களின் வாக்குகளை திராவிட கட்சிகள் புறக்கணிக்கிறதா..? தேவேந்திரர் தன்னார்வ அறக்கட்டளை தலைவர் கேள்வி..?

தேவேந்திர குல இனமக்களின் வாக்குகளை திராவிட கட்சிகள் புறக்கணிக்கிறதா..? தேவேந்திரர் தன்னார்வ அறக்கட்டளை தலைவர் கேள்வி..?

தேவேந்திரகுல வேளாளர் சமுதாயம் வீர தீர பண்பாட்டு கலாச்சாரம் கெ௱ண்ட இந்த சமுதாய மக்களின் வாக்குகளை திராவிட கட்சிகள் புறக்கணிக்கிறதா என தேவேந்திரர் தன்னார்வ அறக்கட்டளையின் தலைவரும் வரலாற்று ஆய்வாளருமான ம.தங்கராஜ் அவர்கள் கேள்வி எழும்பியுள்ளார்.

இது குறித்து அவர் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் வருவதாவது :- தேவேந்திரகுல வேளாளர் கோரிக்கையும் வாக்கும் இணைந்து விட்டது. தேவேந்திரகுல வேளாளர் சமுதாய சாதி கட்சிகளை கூட்டணியில் சேர்த்துக் கொண்டால் தேர்தலில் வாக்குகளை பெற்றுவிடலாம் என்பது 2021 தேர்தலில் சாத்தியமில்லாத சூழலே தற்பொழுது காணப்படுகிறது.

தேவேந்திரகுல வேளாளர் கோரிக்கை சம்பந்தமாக பாஜக மாநிலத்தலைவர் திரு.எல்.முருகன் அவர்கள் அறிக்கையும் , தமிழ்மாநில காங்கிரஸ் கமிட்டி தலைவர் திரு.கே.எஸ்.அழகிரி அவர்கள்அறிக்கையும் வெளிவந்த பிறகு திராவிட கட்சிகளான திமுக, அதிமுக விற்கு நெருக்கடி அதிகமாகியுள்ளது. இந்த இரண்டு கட்சிகள் நிலை என்ன என்று கேள்வி கேட்கத் தொடங்கியுள்ளனர்.

ஒவ்வொரு தொகுதியில் உள்ள தேவேந்திரர்கள் வாக்காளர் என்ற முறையில் தங்கள் தொகுதி சட்டமன்ற உறுப்பினர்களை சந்திக்க தொடங்கி உள்ளனர். இந்த மாற்றத்தைத் தான், வாக்குகள் கோரிக்கையுடன் இணைந்து விட்டது என்கிறேன். திமுக, அதிமுக தேவேந்திரகுல வேளாளர் சமுதாயத்திற்கு என்ன
செய்தது? என்ற கேள்வி கேட்கிறோம்.தென் தமிழகத்தில் அதிமுக கட்சியில் நடக்கும் அரசியலை பற்றி தினகரன் நாளிதழில் (02.08.2020) வந்த செய்தியை அனைத்து சமுக ஊடகங்களில் பதிவு செய்திருந்தார்கள்.

இந்த செய்தியில் குறிப்பிட்ட சில விஷயங்களை பற்றி விவாதிப்போம்:

1.தென் மாவட்டங்களில் பெரிய கலவரங்கள் உருவாகின.அதை தொடர்ந்து தென்மாவட்டங்களில் திமுக அதிக இடங்களில் வெற்றி பெற்றது. இந்த பார்வையுடன் பேசும் பொழுது சில உண்மைகளையும் அறிந்து கொள்ள வேண்டியுள்ளது.

* 1988-1991 மாண்புமிகு திரு .கருணாநிதி அவர்கள் ஆட்சி. இவர் ஆட்சி காலத்தில் தான் 1989ல் போடி நாயக்கனூர் கலவரம் நடந்தது.
* 1991-1996 மாண்புமிகு ஜெ. ஜெயலலிதா அவர்கள் ஆட்சி. இவர் ஆட்சியில் இருக்கும் பொழுது 1995ஆகஸ்டு31 கொடிங்குளம் கலவரம் நடந்தது.

கிட்டதட்ட மூன்று மாதங்கள் தேவேந்திரகுல வேளாளர் கிராமங்களில் அமைதியற்ற சூழல் ஏற்பட்டது. இந்தக் கோபம் தேர்தலில் வெளிப்பட்டது. தேவேந்திரர் வாக்குகள் திமுகவை நோக்கி நகர்ந்தது. 1996-2001 மாண்புமிகு திரு.கருணாநிதி அவர்கள் ஆட்சிக்கு வந்தார்.

தேவேந்திரர் வாக்குகளை பெற்று ஆட்சிக்கு வந்த திமுக, தேவேந்திர்களுக்கு என்ன செய்தது? என்ற கேள்வி எழுகிறது.

இவர் ஆட்சி நடந்த கால கட்டத்தில் வீரன் சுந்தரலிங்கம் போக்குவரத்து கழகம் என்ற பெயரை அறிவித்து பின்னர் ஏற்பட்ட கலவரத்தால் அனைத்து போக்குவரத்து கழகத்திற்கும் வைத்த தலைவர்கள் பெயரை நீக்கியது. இந்த பிரச்சனையால் தென் தமிழகத்தில் பிரச்சனை வெடித்தது.

1999ஜூலை23 மாஞ்சோலை பிரச்சனையால் தாமிரபரணி படுகொலை நடந்தது. இந்தப் பிரச்சனை நடக்கும் பொழுது திமுக ஆட்சி தான் இருந்தது. 1988ல் இருந்து 2001 வரை திமுக, அதிமுக இரண்டு கட்சியும் மாறிமாறி ஆட்சி செய்தது.

இந்த இரண்டு கட்சிகளும் தேவேந்திரர்களுக்கு எதுவும் செய்யவில்லை. ஆனால் திமுக தேவேந்திரர் வாக்குகளை சாதுர்யமாக தன் கையில் வைத்துக்கொண்டது.

2011ல் அதிமுக ஆட்சிக்கு வந்த பிறகு மேற்கு மாவட்டங்களில் அதிக வாக்குகளை பெற்றதால் அந்த பகுதிக்கு அதிக அமைச்சர் பதவி வழங்கினார். தென்மாவட்டத்தில் தேவேந்திரர்களை திருப்திபடுத்த டாக்டர்.சுந்தர் ராஜன் அவர்களுக்கு மந்திரி பதவி கொடுத்ததாக தினகரன் செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இதே டாக்டர் சுந்தர்ராஜன் அவர்களுக்கு அடுத்து வந்த தேர்தலில் வாய்ப்பு தரவில்லை. திமுகவும் அதிமுகவும் தேவேந்திரகுல வேளாளர் சமுதாயத்தில் யாரும் தலைவர்களாக வந்து விடக்கூடாது என்பதில் கவனமாக இருப்பதை இவர்கள் மந்திரிசபை அமைக்கும் பொழுது அறிந்து கொள்ள முடியும்.

தேவேந்திர்களை அதிமுக மட்டும் புறக்கணிக்கிறதா? திமுகவும் புறக்கணிக்கிறதா? என்பது விரைவில் தெரியவரும் காலம் வெகு தெ௱லைவில் இல்லை .

ம.தங்கராஜ்,தலைவர்
தேவேந்திரர் தன்னார்வ அறக்கட்டளை,மதுரை.
செல்:9443405918
வெளியீடுநாள்:
03.08.2020

Leave your comments here...