பல நாடுகளில் தடை – விற்பனைக்கு தயாராகும் டிக் டாக் நிறுவனம் : வாங்குவது யார் தெரியுமா….?

உலகம்

பல நாடுகளில் தடை – விற்பனைக்கு தயாராகும் டிக் டாக் நிறுவனம் : வாங்குவது யார் தெரியுமா….?

பல நாடுகளில் தடை – விற்பனைக்கு தயாராகும் டிக் டாக் நிறுவனம் : வாங்குவது யார் தெரியுமா….?

இந்தியாவின் இறையாண்மை, ஒருமைப்பாடு மற்றும் பாதுகாப்பு ஆகியவற்றைக் கருதி சீனப் பின்னனியைக் கொண்ட டிக் டாக், ஹலோ உள்ளிட்ட செயலிகளுக்கு இந்தியாவில் தடை விதிக்கப்பட்டது. இதையடுத்து, சீன உளவுத்துறையின் ஒரு கருவியாக இருக்கக்கூடும் என்றும் தேசிய பாதுகாப்பைக் கருதியும் அமெரிக்காவும் டிக் டாக் செயலியைத் தடை செய்ய திட்டமிட்டு வருகிறது. இதையடுத்து, டிக் டாக்கின் தாய் நிறுவனமாக பைட்டான்ஸ், செயலி மீதான குற்றச்சாட்டுகளுக்கு விளக்கம் அளிப்பதோடு, அமெரிக்காவில் டிக்டாக் தடை செய்யப்படாமல் இருப்பதற்கான வழிகளையும் ஆலோசித்து வருகிறது.

இந்நிலையில் அமெரிக்காவில் டிக்டாக் செயலியை மைக்ரோசாப்ட் நிறுவனத்துக்கு விற்பது தொடர்பாக சீனாவின் பைட் டான்ஸ் நிறுவனத்துக்கு 45 நாட்கள் அவகாசம் அளிக்க அமெரிக்க அதிபர் டிரம்ப் ஒப்புதல் தெரிவித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.சீனாவை சேர்ந்த டிக்டாக் செயலி, தனிநபர் தகவல்களை கையாள்வது தேசிய அளவில் பாதுகாப்பற்றது என அமெரிக்கா கருதுகிறது. இதனையடுத்தே மைக்ரோசாப்ட் நிறுவனத்திற்கு விற்பனை செய்வதற்கான யோசனையை நிராகரித்த பின்னர், அமெரிக்காவில் டிக்டாக்கை தடை செய்ய திட்டமிட்டு வருவதாக அமெரிக்க அதிபர் டிரம்ப் அறிவித்தார். அதிபர் டிரம்ப் மற்றும் மைக்ரோசாப்ட் சி.இ.ஓ சத்யா நாதெள்ளா இடையே நடந்த ஆலோசனையை தொடர்ந்து வாஷிங்டனை சேர்ந்த ரெட்வுட் நிறுவனம் ஓர் அறிக்கை வெளியிட்டுள்ளது. அதில், அமெரிக்கா, கனடா, ஆஸ்திரேலியா, நியூசிலாந்து ஆகிய நாடுகளில் உள்ள டிக் டாக் உரிமத்தை மைக்ரோசாஃப்ட் வாங்குவது தொடர்பாகப் பேச்சுவார்த்தைகள் நடைபெற்று வருகின்றன. இந்தப் பேச்சுவார்த்தைகள் இன்னும் சில வாரங்களில் முடியும் என எதிர்பார்க்கப்படுகிறது” என்று கூறியுள்ளது.

இந்தச் சூழலில் அமெரிக்க அதிபர் ட்ரம்பும் மைக்ரோசாஃப்ட் தலைமை நிர்வாக அதிகாரி சத்யா நாதெள்ளாவும் சந்தித்துப் பேசியது விவாதப் பொருளானது. இந்த உரையாடலுக்குப் பிறகு அமெரிக்காவில் டிக்டாக்கின் உரிமத்தை வாங்குவது குறித்து மைக்ரோசாஃப்ட் நிறுவனம் அதிகளவில் ஆலோசித்து வருவதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. மைக்ரோசாப்ட் நிறுவனம் அமெரிக்காவின் டிக்டாக் உரிமத்தைப் பெறாத பட்சத்தில் டிக்டாக் நிறுவனத்துக்கு மிகப்பெரிய இழப்பு ஏற்படும் என்றும் கூறப்படுகிறது.அதிபர் ட்ரம்ப்பின் டிக்டாக் மீதான கவலைகள் குறித்து மைக்ரோசாப்ட் நிறுவனம், “டிக்டாக் செயலியின் பாதுகாப்பு குறித்து முழுமையாக மறு ஆய்வு செய்யப்படும். அதிபர் ட்ரம்ப்பின் செயலி தொடர்பான கவலைகளுக்கு மைக்ரோசாஃப்ட் முக்கியத்துவம் கொடுக்கிறது. அமெரிக்காவின் பொருளாதார நன்மைகளுக்கு உதவிகளையும் வழங்குவோம்” என்று தெரிவித்துள்ளது.ஆனால் வெள்ளை மாளிகை மற்றும் பைட் டான்ஸ் நிறுவனங்கள் இது தொடர்பாக அறிக்கை எதுவும் வெளியிடவில்லை.

மேலும் அனைத்து அமெரிக்கர்களின் தனிப்பட்ட தகவல்கள் அனைத்தும் அமெரிக்காவிற்குள் மட்டுமே இருக்குமென தெரிவித்துள்ளது. மேலும் மற்ற சிறிய அமெரிக்க முதலீட்டாளர்களை டிக்டாக் பங்குகளை வாங்க மைக்ரோசாப்ட் நிறுவனம் அழைக்குமென எதிர்ப்பார்க்கப்படுகிறது.

Leave your comments here...