பஞ்சமி நிலத்தில் மணல் கொள்ளை – நடவடிக்கை எடுக்க அம்பேத்கார் மக்கள் இயக்கம் கோரிக்கை..!

சமூக நலன்தமிழகம்

பஞ்சமி நிலத்தில் மணல் கொள்ளை – நடவடிக்கை எடுக்க அம்பேத்கார் மக்கள் இயக்கம் கோரிக்கை..!

பஞ்சமி நிலத்தில் மணல் கொள்ளை – நடவடிக்கை எடுக்க அம்பேத்கார் மக்கள் இயக்கம் கோரிக்கை..!

மதுரை மாவட்டம் வாடிப்பட்டி அருகே செமினிபட்டி கிராமத்தில் பஞ்சமி நிலத்தில் மணல் கொள்ளையில் ஈடுபட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்க அம்பேத்கார் மக்கள் இயக்கம் கோரிக்கை வைத்து உள்ளனர்.

மதுரை மாவட்டம் வாடிப்பட்டி தாலுகா செமினிபட்டி கிராமத்தில் ஆதிதிராவிடர் மக்கள் மயானம் உள்ளது இந்த பகுதி அருகே சுமார் 7 ஏக்கர் பரப்பளவில் பஞ்சமி நிலம் உள்ளது இந்த நிலத்தில் அதிகாரிகள் உடந்தை யோடு பல கோடி ரூபாய் மதிப்புள்ள மண் கொள்ளையடிக்கப்பட்டுள்ளது.

இது குறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு பலமுறை மனு கொடுத்தும் நடவடிக்கை எடுக்கவில்லை தனிப்பட்ட நபர்களுக்கு அதிகாரிகள் துணை போகிறார்கள் இதை கண்டித்து போராட்டம் நடத்த அம்பேத்கர் மக்கள் இயக்கம் முடிவு செய்துள்ளனர். இதுகுறித்து வாடிப்பட்டி தாலுகா அலுவலகத்தில் புகார் மனு கொடுத்து சம்பந்தப்பட்ட நபர்கள் மீது நடவடிக்கை எடுத்து அவர் பயன்படுத்திய ஜேசிபி டிராக்டர் லாரி உட்பட வாகனங்களை பறிமுதல் செய்து அரசுக்கு பல கோடி ரூபாய் நஷ்டம் ஏற்பட துணை போன அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்கவும் அரசு நிலங்களை பாதுகாக்க வலியுறுத்தியும் கோரிக்கை அடங்கிய புகார் மனு கொடுத்துள்ளனர்

Leave your comments here...