சைக்கிளில் வந்து செயின் பறிப்பு – பொதுமக்கள் உஷார்..!
- August 3, 2020
- jananesan
- : 1129
- Madurai
மதுரை தெற்குவாசல் பகுதியில் 50 வயது மதிக்கத்தக்க பெண்ணிடம், சைக்கிளில் வந்தவர் நகையை பறிக்க முயன்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
மதுரை பந்தடியை சேர்ந்த 61 வயதான மூதாட்டி அப்பகுதியில் நடந்து சென்று கொண்டிருந்தார். அவர் அணிந்திருந்த 4 பவுன் தங்க சங்கிலியை சைக்கிளில் வந்தவர் பறிக்க முயற்சி செய்துள்ளார். அப்பெண் அவரிடமிருந்து போராடியதால் அவர் முக்கால் பவுன் நகையுடன் தப்பி ஓடினார். இது குறித்து தெற்கு வாசல் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
கொரோனா அடைப்பு காரணமாக பலரும் வருமானம் இன்றி இருக்கும் நிலையில் இது போன்ற சம்பவங்கள் பல பகுதிகளில் நடைபெற வாய்ப்பு உள்ளதால் தங்கள் வீட்டில் உள்ள முதியவர்கள், பெண்கள் மற்றும் குழந்தைகள் என அனைவரும் நகைகளை அணிந்து வெளியே செல்வது பாதுகாப்பானதாக இருக்காது எனவே நகைகள் அணிந்து வெளியே செல்வதை தவிர்க்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.
NEWS FOR:- MADURAI RAVI
Leave your comments here...