அயோத்தியில் ராமர் கோயில் வடிவில் மாற்றி அமைக்கப்படும் ரயில் நிலையம்..!
- August 3, 2020
- jananesan
- : 1036
- #RamMandir
உத்திர பிரதேசம், மாநிலம் அயோத்தியில் ராமர் கோயில் பூமி பூஜை நிகழ்ச்சி நாளை மறுநாள் (ஆக.,05) நடக்கிறது. இந்நிகழ்ச்சியில் பிரதமர் மோடி பங்கேற்று அடிக்கல் நாட்டுகிறார். இந்நிலையில், அயோத்தி ரயில் நிலையத்தை ராமர் கோயில் வடிவத்திற்கு மாற்றியமைக்க உள்ளதாக ரயில்வே அமைச்சர் பியூஸ் கோயல் தெரிவித்துள்ளார். கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு மாற்றம் செய்யப்பட்ட இந்த ரயில் நிலையத்தை மாற்றியமைக்க ரயில்வே பட்ஜெட்டில், ரூ.80 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டிருந்த நிலையில், தற்போது ரூ.104 கோடியாக உயர்த்தப்பட்டுள்ளது.
देश के करोड़ो लोगो की आस्था के प्रतीक श्री रामजन्मभूमि मंदिर के दर्शन करने आने वाले श्रद्धालुओं के लिये प्रधानमंत्री @NarendraModi जी के नेतृत्व में रेलवे कर रहा है अयोध्या स्टेशन का पुनर्विकास। pic.twitter.com/MNgzKR7PY6
— Piyush Goyal (@PiyushGoyal) August 2, 2020
அயோத்தி ரயில் நிலையத்தை மாற்றியமைக்க பிரதமர் மோடி தலைமையிலான அரசு முடிவு செய்துள்ளதாக பியூஸ் கோயல் தெரிவித்துள்ளார். இதற்கான மாதிரி புகைப்படங்களை வெளியிட்டுள்ளார்.
இந்நிலையில், அயோத்தி ரயில் நிலைய முதற்கட்ட மறுசீரமைப்பு பணிகள் அடுத்தாண்டு ஜூன் மாதத்திற்குள் முடிவடையும் என வடக்கு ரயில்வே பொது மேலாளர் தெரிவித்துள்ளார்.
ரயில் நிலைய வளாகத்தின் உள் மற்றும் வெளிப்புற பகுதிகளை சரிசெய்தல், டிக்கெட் கவுண்டர்களின் எண்ணிக்கை அதிகரித்தல், காத்திருப்பு அறைகளின் எண்ணிக்கை அதிகரித்தல், ஆண்கள் தங்குமிடம், 10 படுக்கைகள் கொண்ட பெண்கள் தங்குமிடம் ஆகியவை கட்டப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Leave your comments here...