ஜம்மு-காஷ்மீரில் எல்லையில் பணிபுரியும் ராணுவ வீரர்களுக்கு ராக்கி கட்டி மகிழ்ந்த சகோதரிகள்..!
- August 2, 2020
- jananesan
- : 1378
- RakshaBandhan
அன்பு, ஒற்றுமை, சகோதரத்துவம், தேசியப் பிணைப்பு மற்றும் ஒற்றுமை ஆகியவற்றை எடுத்துகாட்டும் ஒரு பிரமாண்டமான நிகழ்ச்சியில், வடகிழக்கு சகோதரிகள் ஜம்மு-காஷ்மீர் மற்றும் லடாக் ஆகிய பகுதிகளில் நிறுத்தப்பட்டுள்ள ஆயுதப்படை வீர்ர்கள் மற்றும் துணை ராணுவ வீர ஜவான்களுக்கு ராக்கி கட்டினர்.
ரக்ஷா பந்தனின் புனித சந்தர்ப்பத்தில், எட்டு வடகிழக்கு இந்திய மாநிலங்களான அருணாச்சலப் பிரதேசம், அசாம், மணிப்பூர், மிசோரம், மேகாலயா, நாகாலாந்து, திரிபுரா மற்றும் சிக்கிம் ஆகிய நாடுகளைச் சேர்ந்த சுய உதவிக்குழுக்களும் ராக்கிகளை அனுப்பினர். ஜம்மு-காஷ்மீர் மற்றும் லடாக் ஆகிய இடங்களில் பணிபுரியும் வீர்ர்களுக்கு அனுப்பி வைக்கப்படும் மூவண்ணக் கைபட்டைகள் மற்றும் முகக்கவசங்ககள் – பல்வேறு கலாச்சாரங்கள், மாநிலங்கள் மற்றும் இந்திய மக்களுக்கு இடையிலான நிலையான உணர்ச்சிப் பிணைப்பை ஒன்றாகக் கொண்டு வருகின்றன.
Jammu & Kashmir: Border Security Force (BSF) personnel deployed along the India-Pakistan international border, near RS Pura celebrate #RakshaBandhan with locals. pic.twitter.com/ks4trb3qWT
— ANI (@ANI) August 2, 2020
டெல்லியில் ஒரு அடையாள ராக்கி விழாவும் இன்று நடைபெற்றது, இதில் வடகிழக்கு மாநிலங்களைச் சேர்ந்த சகோதரிகள் மாண்புமிகு வெளியுறவு அமைச்சர், வடகிழக்குப் பிராந்திய அபிவிருத்தி அமைச்சகம் (MDoNER) (IC) டாக்டர்.ஜிதேந்திர சிங், செயலாளர் டாக்டர் இந்தர் ஜித் சிங், சிறப்புச் செயலாளர் இந்தேவர் பாண்டே, சிறப்புக் கடமை அலுவலர் பிரசாந்த் குமார் ஜா மற்றும் டெல்லியில் உள்ள பல்வேறு பிரிவுகளைச் சேர்ந்த ராணுவ வீர்ர்களுக்கும் ராக்கிகளைக் கட்டினர்.
இந்த முயற்சி வடகிழக்கு இந்தியாவிலிருந்து வந்த சுய உதவிக்குழுக்கள், வடகிழக்கு பிராந்திய அபிவிருத்தி அமைச்சகம் (MDoNER), வடகிழக்குக் கவுன்சில் (NEC) மற்றும் வடகிழக்குப் பிராந்திய சமூக வள மேலாண்மைத் திட்டம் (NERCORMP) ஆகியோரால் மேற்கொள்ளப்பட்டது.
Sisters from #Northeast tied Rakhi on Jawans from Armed/Paramilitary forces whose Battalions or Companies are deployed in #JammuAndKashmir & #Ladakh. Unique message that sisters across country wish for safety of their brothers who guard the borders day & night for their safety. pic.twitter.com/iZ4jdZaZX9
— Dr Jitendra Singh (@DrJitendraSingh) August 2, 2020
இந்த நிகழ்ச்சியில் பேசிய அமைச்சர் டாக்டர்.ஜிதேந்திர சிங், “ஜம்மு & காஷ்மீர்” எனது நாடாளுமன்றத் தொகுதி என்றும், வடகிழக்கு தனது உத்தியோகபூர்வத் தொகுதி என்றும் தெரிவித்தார். ஜம்முவின் உதம்பூரைச் சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினராகவும் (எம்.பி.), யூனியன் பிரதேசத்தின் குடிமகனாகவும், தனக்கு இந்தப் பகுதியுடன் ஆழமான வேரூன்றிய தொடர்பு உள்ளது. வடகிழக்குப் பிராந்திய அபிவிருத்தி அமைச்சகத்தின் (MDoNER) அமைச்சராக, தனக்கு வடகிழக்குப் பிராந்தியத்துடன் ஒரு வலுவான பாசப்பிணைப்பு உள்ளதாகவும் அது தனக்கு ஒதுக்கப்பட்ட பொறுப்புகளின் ஒரு பகுதியாகும் என்றும் தெரிவித்தார். நாட்டின் ஒட்டுமொத்த நலன் மற்றும் மேம்பாட்டிற்காக புதுமையான யோசனைகளைக் கொண்டு வரும் வடகிழக்கு மாநிலங்களைச் சேர்ந்த எங்கள் சகோதர சகோதரிகளிடமிருந்து நான் தொடர்ந்து பிரதிநிதித்துவங்களைப் பெறுகிறேன். இது வடகிழக்கு சமூகத்துடனான ஒரு நெருங்கிய சந்திப்பின் போது, அவர்கள் ஆயுதப் படைகளுடன், வலுவான, விலகாத ஒற்றுமை நிலையை வெளிப்படுத்தினர். இது இரு பிராந்தியங்களையும் ஒரு வலுவான சக்தியாகப் பிணைக்கும் இந்த யோசனை உதிக்க உதவியது ”.
அந்த நிகழ்ச்சியில் பேசிய செயலாளர் டாக்டர். இந்தர் ஜித் சிங், “இப்பகுதியில் உள்ள சுய உதவிக்குழுக்கள் ஏப்ரல் முதல் முகக்கவசங்ககளை உற்பத்தி செய்து வருகின்றன. ராணுவ வீர்ர்களுக்கு முகக்கவசங்களைத் தயாரிப்பதற்காக ஊரடங்கின் போது போக்குவரத்து மிகவும் மட்டுப்படுத்தப்பட்ட சூழலில் கூட அவர்கள் வெளியே சென்றனர். அவர்களின் உழைப்பு, அன்பு மற்றும் ஒற்றுமை ஆகியவை இந்த முயற்சியின் பின்னணியில் உள்ள முக்கிய உந்து சக்தியாகும் ”.
Leave your comments here...