மதுரை வைகையில் மண் எடுத்து அயோத்திக்கு அனுப்பி வைக்கும் : விஸ்வ ஹிந்து பரிஷத் – வீடியோ உள்ளே..!

தமிழகம்

மதுரை வைகையில் மண் எடுத்து அயோத்திக்கு அனுப்பி வைக்கும் : விஸ்வ ஹிந்து பரிஷத் – வீடியோ உள்ளே..!

மதுரை வைகையில் மண் எடுத்து அயோத்திக்கு அனுப்பி வைக்கும் : விஸ்வ ஹிந்து பரிஷத் – வீடியோ உள்ளே..!

உத்தர பிரதேசத்தில், முதல்வர் யோகி ஆதித்யநாத் தலைமையிலான, பா.ஜ.க. ஆட்சி நடக்கிறது. இங்குள்ள அயோத்தியில், சர்ச்சைக்குரிய நிலத்தில் ராமர் கோவில் கட்ட, உச்ச நீதிமன்றம் கடந்த ஆண்டு நவம்பரில் அனுமதியளித்தது. கோவில் கட்டுவதற்காக, ஸ்ரீராம ஜன்மபூமி தீர்த்த ஷேத்ரா அறக்கட்டளையை, மத்திய அரசு அமைத்தது. இந்நிலையில், அயோத்தியில், பிரமாண்ட ராமர் கோவில் கட்டுவதற்கான அடிக்கல் நாட்டு விழா, 5ம் தேதி காலை நடக்கிறது. இதில், பிரதமர் மோடி பங்கேற்று, அடிக்கல் நாட்டுகிறார். விழாவில் பங்கேற்க, பா.ஜ.க மூத்த தலைவர்கள் அத்வானி, முரளி மனோகர் ஜோஷி ஆகியோரையும் அழைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.

முன்னதாக அயோத்தியில் ராமர் ஆலயம் கட்டும் பணிக்காக, மதுரையில் உள்ள விஸ்வ ஹிந்து பரிஷத் அமைப்பினர், மதுரை வைகை நதியில் மண் எடுத்து, மீனாட்சியம்மன் ஆலயத்தில், தெற்கு கோபுர வாசலில் தாங்கள் தட்டுகளில் கொண்டு வந்த வைகையாற்று மணலை பூஜித்து ஊர்வலமாக எடுத்து வந்தனர். பிறகு இவர்கள் தபால் நிலையம் சென்று விரைவு தபால் மூலமாக பூஜிக்கப்பட்ட வைகை ஆற்று மணலை அயோத்திக்கு அனுப்பி வைத்தனர்.

இந்த நிகழ்ச்சிக்கு, பசும் பொன் துர்கா வஹிணி மாநில அமைப்பாளர் தலைமை வகித்தார். மாவட்ட பொதுச் செயலர் சுரேஷ்குமார் முன்னிலை வகித்தார்.மாவட்டத் தலைவர் கே.எம். பாண்டியன், மாவட்ட துர்கா வஹிணி அமைப்பாளர் கமலி ப்ரியா, நகர செயலர் தங்கராமு, கிளை பஜ்ரங்தள் அமைப்பாளர் சங்கிலிமுருகன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

தமிழகத்தில் பல்வேறு பகுதிகளிலிருந்து அயோத்தியில் ராமர் கோயில் கட்டும் பணிக்கு கட்டுமான பொருட்கள் தொடர்ந்து அனுப்பப்பட்டு வருகிறது. மதுரை கோயில் நகரம் என்பதாலும், வைகை நதியானது சிறபுமிக்கது என்பதாலும், இந்து அமைப்புகள் வைகை ஆற்று மணலை கோயிலில் பூஜித்து அயோத்திக்கு அனுப்புவதை புனிதமாக கருதுகின்றனராம்.

Leave your comments here...