முழு ஊரடங்கு பின்பற்ற மதுரையில் காவல் ஆய்வாளர் விழிப்புணர்வு பிரசாரம்..!

தமிழகம்

முழு ஊரடங்கு பின்பற்ற மதுரையில் காவல் ஆய்வாளர் விழிப்புணர்வு பிரசாரம்..!

முழு ஊரடங்கு பின்பற்ற மதுரையில் காவல் ஆய்வாளர் விழிப்புணர்வு பிரசாரம்..!

கொரோனா வைரஸ் குறித்து காவல் ஆய்வாளர் விழிப்புணர்வு பிரச்சாரம் மேலும் நாளை முழு ஊரடங்கு பின்பற்ற பொதுமக்களுக்கு அறிவுறுத்தல்.

கொரோனா வைரஸ் தொற்று காரணமாக தமிழக அரசு ஆகஸ்ட் மாதம் 31ஆம் தேதி வரை ஊரடங்கு உத்தரவை நீட்டிப்பு செய்துள்ளார்கள் மேலும் ஆகஸ்ட் மாதம் 5-ந் ஆயிற்று கிழமைகளும் எவ்வித தளர்வுகள் ஊரடங்கு என தமிழக அரசு அறிவிப்பாணை வெளியிட்டிருந்தார்கள் இதனடிப்படையில் நாளை முதல் ஞாயிற்றுக்கிழமை இவ்வித தளர்வுகள் இன்றி இவருடன் உத்தரவை அனைவரும் பின்பற்ற வேண்டும் என மதுரை மாநகர முழுவதும் காவல்துறையினர் ஒலிபெருக்கி மூலமாக பொதுமக்களுக்கு அறிவுரை வழங்கி வருகிறார்கள்.

இதன் அடிப்படையில் இன்று தனியார் தொண்டு நிறுவனம் மூலமாக பிரச்சாரம் மேற்கொண்ட மதுரை சுப்பிரமணியபுரம் காவல் ஆய்வாளர் கலைவாணி மற்றும் காவல் ஆய்வாளர்கள் பழங்காநத்தம் மற்றும் திருப்பரங்குன்றம் சாலையில் பொதுமக்களுக்கு ஒலிபெருக்கி மூலமாக விழிப்புணர்வு பிரச்சாரத்தை மேற்கொண்டனர் இதில் கூறுகையில் பொதுமக்கள் நாளை வீட்டை விட்டு யாரும் வெளியே வரக்கூடாது மருத்துவ காரணங்களுக்கு மட்டுமே வெளியே வர வேண்டும் எனவும் மீறி வருவதற்கு அபராதமும் வாகனமும் பறிமுதல் செய்யப்படும் எனவும் காவல்துறைக்கு முழு ஒத்துழைப்பு தரவேண்டும் எனவும் கேட்டுக் கொண்டனர் நீங்கள் ஒத்துழைப்பு கொடுத்தால் தான் நோய் தீவிரம் குறையும் எனவும் பொதுமக்களிடம் பிரச்சாரம் மேற்கொண்டார் இது பொதுமக்களிடையே மிகுந்த வரவேற்பைப் பெற்றது.

Leave your comments here...