டிஜிட்டல் இந்தியா நில ஆவணங்கள் நவீனப்படுத்துதல் திட்டத்தின் சிறந்த நடைமுறைகள் குறித்த கையேடு வெளியீடு..!

இந்தியா

டிஜிட்டல் இந்தியா நில ஆவணங்கள் நவீனப்படுத்துதல் திட்டத்தின் சிறந்த நடைமுறைகள் குறித்த கையேடு வெளியீடு..!

டிஜிட்டல் இந்தியா நில ஆவணங்கள் நவீனப்படுத்துதல் திட்டத்தின் சிறந்த நடைமுறைகள் குறித்த கையேடு வெளியீடு..!

டிஜிட்டல் இந்தியா நில ஆவணங்கள் நவீனப்படுத்துதல் திட்டத்தின் சிறந்த நடைமுறைகள் குறித்த கையேட்டை மத்திய ஊரக வளர்ச்சி மற்றும் பஞ்சாயத் ராஜ் அமைச்சர் நரேந்திர சிங் தோமர் வெளியிட்டார்.

இத்திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டதில் இருந்து , பிராந்திய மற்றும் தேசிய கருத்தரங்குகளில் மாநிலங்கள் தெரிவித்த கருத்துகளின் அடிப்படையில், ஊரக வளர்ச்சி அமைச்சகத்தின் , நில வளத் துறை இதனை உருவாக்கியுள்ளது.

தேசிய கொள்கை வழிமுறைகளின் படி, நில ஆவண நவீனப்படுத்துதலில் பின்பற்றப்படும் சிறந்த நடைமுறைகள் இந்தக் கையேட்டில் பட்டியலிடப்பட்டுள்ளன. கர்நாடகா, ஆந்திரா, குஜராத், அரியானா, மகாராஷ்டிரா, திரிபுரா, இமாச்சலப் பிரதேசம், ஜார்க்கண்ட், ராஜஸ்தான் ஆகிய ஒன்பது மாநிலங்களில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வின் அடிப்படையிலும் இது உருவாக்கப்பட்டுள்ளது. (பதிவு, மாற்றம், அளவீடு, தீர்வு, நில கையகப்படுத்துதல் போன்ற) பல்வேறு நடைமுறைகளை அமல்படுத்துவதில் ஏற்படும் இடைவெளிகளையும் , தொழில்நுட்ப முன்முயற்சிகள், சட்டப்பூர்வ நிறுவன அம்சங்கள் ஆகியவற்றையும் இது நிறைவு செய்கிறது .


இந்த நிகழ்ச்சியில் உரையாற்றிய நரேந்திர சிங் தோமர்: நல்லிணக்கமான, முன்னேற்றம் கொண்ட எந்த சமுதாயத்திலும், சிறந்த நில ஆவண முறைகள் அவசியத் தேவையாகும் என்று கூறினார். பல ஆண்டுகளாக, தவறுகள் அற்ற, தவறுகள் செய்யமுடியாத, எளிதாக அணுகக்கூடிய நில ஆவணங்களை ஏற்படுத்துதல் இந்தியாவின் நோக்கமாக இருந்து வந்துள்ளது. டிஜிட்டல் இந்தியா நில ஆவணங்கள் நவீனப்படுத்துதல் திட்டத்தை நடைமுறைப்படுத்துவதில் உள்ள பல்வேறு அச்சுறுத்தல்கள், சவால்கள், பிரச்சினைகளுக்குத் தீர்வு காண்பதில் கவனம் செலுத்தும் வகையில், பல்வேறு சிறந்த நடைமுறைகளின் தொகுப்பாக இந்தக் கையேடு உள்ளது.

Leave your comments here...