சிறுமிகளுக்கு தொல்லை கொடுத்தவர் போக்சோ சட்டத்தில் கைது..!

சமூக நலன்தமிழகம்

சிறுமிகளுக்கு தொல்லை கொடுத்தவர் போக்சோ சட்டத்தில் கைது..!

சிறுமிகளுக்கு தொல்லை கொடுத்தவர் போக்சோ சட்டத்தில் கைது..!

மதுரை திருப்பரங்குன்றம் அருகே 6 வயது குழந்தைக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த வாலிபரை போக்சோ சட்டத்தில் கைது செய்து போலிசார் விசாரணை நடத்தி வருகின்றனர்*

மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றம் தாலுகாவிற்குட்பட்ட வில்லாபுரம் மாரியப்ப பிள்ளை தெருவை சேர்ந்தவர் பாண்டி. இவரது மகன் பாலசுப்பிரமணியன். (வயது 37) இரும்புபட்டறையில் வேலை செய்து வந்த இவர் தற்போதைய ஊராடங்கால் வேலை இல்லாத நிலையில் தற்போது அப்பகுதியில் வீதிகளில் சைக்கிளில் டீ விற்பனை செய்து வருவதாக கூறப்படுகிறது.

இந்நிலையில்பாலசுப்பிரமணியின் வீட்டின் எதிரே 6 வயது பெண்குழந்தையையும், 8 வயது ஆண் குழந்தையையும் வசித்து வந்த நிலையில் அவ்வப்போது பாலசுப்பிரமணியனின் வீட்டிற்கு சென்று விளையாடுவது வழக்கமாகக் கொண்டிருந்தது.

இதனை பயன்படுத்தி இரண்டு குழந்தைகளுக்கும் பாலசுப்பிரமணியன் பாலியல் தொந்தரவு செய்ததாக கூறப்படுகிறது.அதனை அறிந்த குழந்தையின் தாயார் அமீனா பேகம் திருப்பரங்குன்றம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் செய்தார். இதனையடுத்து போலீஸார் புகாரின் அடிப்படையில் சிறுமி மற்றும் சிறுவனுக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த பாலசுப்பிரமணியனை திருப்பரங்குன்றம் அனைத்து மகளிர் காவல் நிலையம் போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Leave your comments here...