இந்தியா வான்வழியின் சிம்ம சொப்பனமாக ரபேல் போர் விமானங்கள் : அம்பாலா விமானபடை தளத்தில் தரையிறங்கியது..!

இந்தியா

இந்தியா வான்வழியின் சிம்ம சொப்பனமாக ரபேல் போர் விமானங்கள் : அம்பாலா விமானபடை தளத்தில் தரையிறங்கியது..!

இந்தியா வான்வழியின் சிம்ம சொப்பனமாக ரபேல் போர் விமானங்கள் : அம்பாலா விமானபடை தளத்தில் தரையிறங்கியது..!

பிரான்சில் இருந்து, 59 ஆயிரம் கோடி ரூபாய் செலவில், 36 அதிநவீன ரபேல் போர் விமானங்களை வாங்க, நான்கு ஆண்டுகளுக்கு முன், மத்திய அரசு ஒப்பந்தம் போட்டது.இரட்டை இன்ஜீன் கொண்ட இந்த விமானங்களை போர்க்கப்பல்களில் எளிதாக தரையிறக்க முடியும். கடும் குளிரிலும் இயக்க முடியும் 9 டன் எடையுள்ள ஆயுதங்களை எடுத்து சென்று தாக்க முடியும். இவற்றில், முதல்கட்டமாக, ஐந்து ரபேல் விமானங்கள், பிரான்சில் இருந்து, நேற்று முன் தினம்(ஜூலை 27) புறப்பட்டன. இந்த விமானங்கள், 7,000 கி.மீ., பயணம் செய்து, ஹரியானாவில் உள்ள, அம்பாலா விமானப்படை தளத்தில் தரையிறங்கின.


இந்திய எல்லையில் நுழைந்ததும், அரபிக்கடலில் பாதுகாப்பு பணியில் இருந்த ஐஎன்எஸ் கோல்கட்டா டெல்டா 63, ஐஎன்எஸ் டெல்டா போர்க்கப்பல்களை தொடர்பு கொண்டன. அப்போது, ரபேல் விமானங்களுக்கு வரவேற்பு அளிக்கப்பட்டது.


இதனை தொடர்ந்து, ஐந்து ரபேல் போர் விமானங்களும், இந்திய வான் எல்லையில் நுழைந்தன. அந்த விமானங்களை இந்திய விமானப்படைக்கு சொந்தமான சுகோய் சூ 30 எம்கேஐ விமானங்கள் அழைத்து வந்தன. அம்பாலாவில், தரையிறங்கிய விமானங்களுக்கு சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது. தண்ணீர் பீய்ச்சி அடித்து ரபேல் போர் விமானங்களுக்கு வரவேற்பு அளிக்கப்பட்டது.


பிரான்ஸ்10 விமானங்களை ஒப்படைத்த நிலையில், 5 விமானங்கள், பயிற்சிக்காக அங்கேயே உள்ளன. மற்ற 5 விமானங்கள் இந்தியா வந்துள்ளன.இதையொட்டி, அம்பாலாவில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. சுற்று வட்டாரத்தில் உள்ள கிராமங்களில், 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. விமானப்படை தளத்தின் சுற்று வட்டார பகுதிகளில், ‘ட்ரோன்’ எனப்படும் ஆளில்லா குட்டி விமானங்கள் இயக்கவும், புகைப்படங்கள் மற்றும் ‘வீடியோ’ எடுக்கவும், தடை விதிக்கப்பட்டுள்ளது.

Leave your comments here...