2020-21ல் ரஜினிகாந்த் தனது ஆன்மீக அரசியல் பிரவேசத்தை தொடங்க உள்ளார் – அர்ஜுன் சம்பத்..!

அரசியல்

2020-21ல் ரஜினிகாந்த் தனது ஆன்மீக அரசியல் பிரவேசத்தை தொடங்க உள்ளார் – அர்ஜுன் சம்பத்..!

2020-21ல் ரஜினிகாந்த் தனது ஆன்மீக அரசியல் பிரவேசத்தை தொடங்க உள்ளார் – அர்ஜுன் சம்பத்..!

2020-21ல் ரஜினிகாந்த் தனது ஆன்மீக அரசியல் பிரவேசத்தை தொடங்க உள்ளார் என இந்து மக்கள் கட்சி அர்ஜுன் சம்பத் கூறியுள்ளார்.

மதுரை ஜெய்ஹிந்த்புரம் இந்து மக்கள் கட்சியை மதுரை மாவட்ட தலைமை அலுவலகத்தில் இந்து மக்கள் கட்சியின் மாநில தலைவர் அர்ஜூன் சம்பத் செய்தியாளர்களை சந்தித்தார்

அப்போது பேசிய அவர்: கொரோனா ஊரடங்கு காலம் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் அரசியல் பிரவேசத்திற்கு தடையாக அமைந்துள்ளது. 2020 21 ஜனநாயக போர்க்களம் அரசியல் தேர்தலில் ரஜினிகாந்தின் ஆன்மீக அரசின் கொள்கை வைத்து ரஜினிகாந்தின் அரசியல் கொள்கை வர உள்ளது. ஆன்மீக அரசியல் அறை உருவாக்குவதற்கு உலகப் புகழ்பெற்ற மீனாட்சி அம்மன் கோயிலிலிருந்து அரசியல் பிரவேசத்தை தொடங்குவதற்கு ரஜினிகாந்த் திட்டமிட்டிருந்தார்.

கொரோனா ஊரடங்கு காலத்தினால் அது தள்ளிப்போயுள்ளது.கொரோனா ஊரடங்கு காலம் முடிந்தவுடன் தமிழகத்தில் ரஜினிகாந்த் ஆன்மீக அரசியல் கொள்கையை பிரச்சாரம் செய்து அரசியல் அலையை உருவாக்கி. இருபெரும் திராவிடக் கட்சிகளை வீழ்த்தி ஆன்மீக அரசியலை தமிழகத்தின் அரியணையில் ஏற்றுவார் என்றார்.


செய்தி- மதுரை ரவி

Leave your comments here...