நாகர்கோவில் தொகுதி திமுக எம்.எல்.ஏ சுரேஷ் ராஜனுக்கு கொரோனா தொற்று உறுதி..!

அரசியல்தமிழகம்

நாகர்கோவில் தொகுதி திமுக எம்.எல்.ஏ சுரேஷ் ராஜனுக்கு கொரோனா தொற்று உறுதி..!

நாகர்கோவில் தொகுதி திமுக எம்.எல்.ஏ சுரேஷ் ராஜனுக்கு கொரோனா தொற்று உறுதி..!

கொரோனா நோய் தொற்றுக்கு அடுத்தடுத்து எம்எல்ஏக்கள் பாதிக்கப்பட்டு வரும் நிலையில், மேலும் ஒரு திமுக எம்எம்ஏவுக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

கொரோனவின் பாதிப்பு தமிழகத்தில் படுவேகமாக அதிகரித்து வருகிறது. கொரோனா தொற்றுக்கு பொதுமக்கள் பாதிப்படைந்து வரும் நிலையில், தொற்றை தடுக்க போராடி வரும் அரசு அலுவலர்கள், அமைச்சர்கள், தூய்மை பணியாளர்கள் என அனைவருக்கும் தொற்று பரவி வருகிறது.

குறிப்பாக தமிழக அமைச்சர்கள், திமுக எம்எல்ஏக்கள் அதிகளவு பாதிப்படைந்து வருகின்றனர். இதில் ஏற்கனவே கொரோனா தொற்றால் திமுக எம்எல்ஏ ஜெ. அன்பழகன் உயிரிழந்து விட்டார். அவரைத் தொடர்ந்து, திமுக எம்எல்ஏக்களில் 15க்கும் அதிகமானோர் இதுவரை கொரோனாவால் பாதிப்படைந்துள்ளனர். தமிழகத்தில் இதுவரை அமைச்சர்கள் உள்பட 20 எம்.எல்.ஏக்களுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டிருந்தது.

இந்த நிலையில், நாகர்கோவில் தொகுதி திமுக எம்.எல்.ஏ சுரேஷ் ராஜனுக்கும் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதையடுத்து, ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவமனையில் சுரேஷ் ராஜன் அனுமதிக்கப்பட்டுள்ளார். நேற்று கன்னியாகுமரி மாவட்டம் கிள்ளியூர் தொகுதி காங்கிரஸ் எம்.எல்.ஏ ராஜேஷ் குமார் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட நிலையில், இன்று அதே மாவட்டத்தை சேர்ந்த மற்றொரு எம்.எல்.ஏவுக்கும் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

Leave your comments here...