ஒரே நாடு, ஒரே சட்டம்.!அடுத்த இலக்கு நாடு முழுவதும் ஒரே அட்டை : அமித்ஷா வியூகம்

அரசியல்

ஒரே நாடு, ஒரே சட்டம்.!அடுத்த இலக்கு நாடு முழுவதும் ஒரே அட்டை : அமித்ஷா வியூகம்

ஒரே நாடு, ஒரே சட்டம்.!அடுத்த இலக்கு நாடு முழுவதும் ஒரே அட்டை : அமித்ஷா வியூகம்

டில்லியில் நடந்த இந்திய பதிவாளர் ஜெனரல் மற்றும் மக்கள் தொகை கணக்கெடுப்பு கமிஷனர் அலுவலக கட்டட அடிக்கல் நாட்டு விழாவில் பேசிய மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா:

The foundation stone for the census building was laid in New Delhi today.

2021 ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பு, மொபைல் செயலி மூலம் கணக்கெடுப்பட உள்ளது என்று தெரிவித்தார். மேலும், காகித கணக்கெடுப்பில் இருந்து டிஜிட்டல் கணக்கெடுப்புக்கு மாறும் முறையாக இது அமையும்.அனைத்து பயன்பாடுகளுக்கும் ஒரே விதமான அடையாள ஆவணமோ அல்லது அட்டையோ தேவை.நாடு முழுவதும் உள்ள அனைவருக்கும் ஆதார் கார்டு, ஓட்டுநர் உரிமம், வங்கி கணக்கு அட்டை, வாக்காளர் அட்டை, பாஸ்போர்ட் போன்ற அனைத்தையும் ஒன்றிணைத்து ஒரே அட்டை வழங்குவது குறித்து ஆய்வு செய்து வருகிறோம். கணக்கெடுப்பு துவங்கிய 140 ஆண்டு கால வரலாற்றில், முதல் முறையாக மொபைல் செயலி மூலமாக மக்கள் தொகை கணக்கெடுப்பட உள்ளது. வீடுவீடாக மக்கள் தொகை கணக்கெடுப்பு பணியில் ஈடுபடுபவர்கள் தங்கள் சொந்த செல்போன் வாயிலாக கணக்கெடுப்பை நடத்த ஊக்குவிக்கப்படுவார்கள். மேலும் டிஜிட்டல் முறையில் தயாரிக்கப்படும் இந்த திட்டத்துக்காக மத்திய அரசு ரூ. 12,000 கோடி நிதி ஒதுக்கீடு செய்கிறது என கூறினார்.

Comments are closed.