நில அபகரிப்பு வழக்கில் சிபிசிஐடி விசாரணைக்கு ஆஜராகாத திமுக எம்.பி ஜெகத்ரட்சகன்.!

சமூக நலன்

நில அபகரிப்பு வழக்கில் சிபிசிஐடி விசாரணைக்கு ஆஜராகாத திமுக எம்.பி ஜெகத்ரட்சகன்.!

நில அபகரிப்பு வழக்கில் சிபிசிஐடி விசாரணைக்கு ஆஜராகாத திமுக எம்.பி ஜெகத்ரட்சகன்.!

சென்னை குரோம்பேட்டையில் உள்ள தோல் தொழிற்சாலையின் தலைவராக ஜெகத்ரட்சகன் இருந்த போது, நில உச்சவரம்பு சட்ட விதிகளை மீறி சுமார் ஒன்றரை ஏக்கர் நிலத்தை தனி நபர்களுக்கு வழங்கியதாக அவர் மீது புகார் எழுந்தது. இதுதொடர்பாக தொடரப்பட்ட பொதுநல வழக்கை விசாரித்த சென்னை உயர்நீதிமன்றம், புகார் குறித்து விசாரிக்குமாறு அரசுக்கு உத்தரவிட்டது.

இதை தொடர்ந்து வழக்கை விசாரித்த சிபிசிஐடி போலீசார் ஜெகத்ரட்சகனை இன்று விசாரணைக்கு ஆஜராகும்படி சம்மன் அனுப்பி இருந்தனர். இந்நிலையில், சிபிசிஐடி விசாரணைக்கு ஜெகத்ரட்சகன் நேரில் ஆஜராகவில்லை. ஜெகத்ரட்சகனுக்கு பதிலாக, அவரது வழக்கறிஞர்கள் விசாரணைக்கு ஆஜராகினர்.

Comments are closed.