நடிகை விஜயலட்சுமி தற்கொலைக்கு தூண்டிய சீமான் கைது செய்யப்படுவாரா…?

அரசியல்சினிமா துளிகள்

நடிகை விஜயலட்சுமி தற்கொலைக்கு தூண்டிய சீமான் கைது செய்யப்படுவாரா…?

நடிகை விஜயலட்சுமி தற்கொலைக்கு தூண்டிய  சீமான் கைது செய்யப்படுவாரா…?

தமிழில் விஜய், சூர்யா இணைந்து நடித்த ப்ரண்ட்ஸ் படத்தில் சூர்யாவுக்கு ஜோடியாக நடித்தவர் நடிகை விஜயலட்சுமி. அதைத்தொடர்ந்து ஆர்யாவின் பாஸ் என்கிற பாஸ்கரன் உள்ளிட்ட சில படங்களில் நடித்திருந்தார்.

சென்னை திருவான்மியூரில் உள்ள தனது வீட்டில் மாத்திரைகளை உட்கொண்டு நடிகை விஜயலட்சுமி இன்று தற்கொலைக்கு முயன்றார். இதையடுத்து அவர் சென்னை அடையாற்றில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.

மிகுந்த மன அழுத்தத்தில் இருப்பதாக விடியோ வெளியிட்ட விஜயலட்சுமி தற்கொலைக்கு முயன்றிருப்பது குறிப்பிடத்தக்கது. முன்னதாக அவர், ஒரு வீடியோ பதிவிட்டு வெளியிட்டுள்ளார். அதில், “இது எனது கடைசி வீடியோ. கடந்த 4 மாதமாக சீமானும், சீமான் கட்சியினரும் கொடுத்த அழுத்தம் காரணமாக மன அழுத்தத்தில் உள்ளேன். ரொம்ப மல்லுக்கட்டிட்டு வாழணும்னு முயற்சித்தது எனது அம்மா, அக்காவுக்காகத்தான். நேற்று முன்தினம் ஹரிநாடார் பேசி ரொம்ப அசிங்கப்படுத்தியது, மீடியாவில் என்னை அசிங்கப் படுத்தியது போதும் என ஆகி விட்டது. இதுக்குமேல் என்னால் தாங்கிக் கொள்ள முடியாது.

எனது குடும்பத்தை விட்டுச் செல்கிறேன். சீமானை விடாதீர்கள். அவர், முன்ஜாமீன் எடுக்கவோ, தப்பிக்கவோ விடக்கூடாது. நான் அதிக நாள் வாழ நினைத்தேன். ஆனால், வாழ விடவில்லை. சீமான், ஹரி நாடாரை கைது செய்ய வேண்டும்” என கண்ணீர் வடித்தபடி அதில் கூறியுள்ளார். இதுகுறித்து போலீஸார் விசாரணையை தொடங்கியுள்ளனர்.

Leave your comments here...