இன்று 21ஆம் ஆண்டு கார்கில் போர் வெற்றி தினம் – போர் நினைவுச் சின்னத்தில் ராஜ்நாத் சிங் மரியாதை.!

இந்தியா

இன்று 21ஆம் ஆண்டு கார்கில் போர் வெற்றி தினம் – போர் நினைவுச் சின்னத்தில் ராஜ்நாத் சிங் மரியாதை.!

இன்று  21ஆம் ஆண்டு கார்கில் போர் வெற்றி தினம் – போர் நினைவுச் சின்னத்தில் ராஜ்நாத் சிங் மரியாதை.!

இந்திய ராணுவத்தின் உறுதியையும், வலிமையையும் ஒருசேர உலகிற்கு பறைசாற்றிய தருணம் கார்க்கில் போர் என்றால் அதை எவராலும் மறுக்கவும் முடியாது.மறைக்கவும் முடியாது. நமது நாட்டுக்காக எத்தனையோ வீரர்கள் தங்களது இன்னுயிரை மாய்த்த நாள் இன்று.

கார்கில் போரில் வீரமணமடைந்த ராணுவ வீரர்களின் தியாகத்தை நினைவுக்கூறும் வகையில் ஆண்டு தோறும் ஜூலை 26ஆம் தேதி கார்கில் வெற்றி தினம் கொண்டாடப்பட்டு வருகிறது. இந்தியா, பாகிஸ்தான் எல்லைப் பகுதியில் அத்துமீறி நுழைந்த பாகிஸ்தான் படைகளை வெற்றி கொண்டு கார்கிலில் மீண்டும் இந்திய கொடியை நாட்டிய இந்திய ராணுவ வீரர்கள் பறக்க விட்டதை அவ்வளவு எளிதாக மறுந்து விட முடியுமா என்ன?

1999ம் ஆண்டு பாகிஸ்தானிய படைகள் மற்றும் பயங்கரவாதிகள் ஆகியோர் இந்திய எல்லைக்குள் நுழைந்தனர். ஊடுருவிய படைகள் முக்கிய இடங்களைத் தன் கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வந்தது. இவர்களை விரட்டி அடிக்க இந்திய ராணுவத்தினர் நடத்திய தாக்குதலின் பெயர் தான் ’ஆப்ரேஷன் விஜய்’.பாகிஸ்தான் தரப்பில் ஆயிரத்து 200க்கும் மேற்பட்ட வீரர்களையும், 3 ஆயிரத்துக்கும் மேற்பட்ட தீவிரவாதிகளையும் கொன்று குவித்தது இந்திய ராணுவம். நமது தரப்பில் 576 வீரர்கள் தங்கள் இன்னுயிரைத் தியாகம் செய்து கார்கிலில் வெற்றிக் கொடியைப் பறக்க விட்டனர். ஜூலை 26, 1999ல் இந்திய ராணுவ கார்கில் வெற்றியை அதிகாரப்பூர்வமாக அறிவித்தது. அன்று முதல் இந்நாள் ’விஜய் திவாஸ்’ என்று அழைக்கப்பட்டு கொண்டாடப்படுகிறது.

அவ்வகையில் இன்று 21வது கார்கில் வெற்றி தினம் கடைப்பிடிக்கப்படுகிறது. இதையொட்டி, டெல்லியில் உள்ள தேசிய போர் நினைவுச்சின்னத்தில் பாதுகாப்புத்துறை மந்திரி ராஜ்நாத் சிங், பாதுகாப்புத் துறை இணை மந்திரி ஸ்ரீபாத் நாயக் மற்றும் முப்படை தளபதிகள் மரியாதை செலுத்தினார். இதையொட்டி ராணுவ வீரர்களுக்கு அனைத்து தரப்பினரும் மரியாதை செலுத்துகின்றனர்.

பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் வெளியிட்டுள்ள பதிவில், சமீபத்திய வரலாற்றில் உலகம் கண்ட மிக சவாலான சூழ்நிலையில் எதிரிகளை எதிர்த்துப் போராடிய இந்திய படைகளின் துணிச்சலான வீரர்களுக்கு வணக்கம் செலுத்துவதாக கூறி உள்ளார்.


கார்கில் வெற்றி தினமானது, இந்தியாவின் பெருமை, வீரம் மற்றும் உறுதியான தலைமையின் சின்னம் என உள்துறை அமைச்சர் அமித்ஷா கூறி உள்ளார்.


கொரோனா வைரஸ் பரவல் காரணமாக இந்த ஆண்டு பெரிய அளவில் விழா நடைபெறவில்லை. பாஜக தலைவர் ஜெ.பி நட்டா உயிரிழந்த வீரர்களுக்கு மலரஞ்சலி செலுத்தினார்.

கார்கில் போரில் நாட்டுக்காக இன்னுயிரை இழந்த ராணுவ வீரர்கள் மற்றும் அதிகாரிகளுக்கு மரியாதை செலுத்தும் வகையில், சமூக வலைத்தளங்களில் புகைப்படங்கள், வீடியோக்கள் வெளியிடப்பட்டுள்ளன. கார்கில் வெற்றியையும் வீரர்களின் தியாகத்தையும் நினைவுகூர்ந்து மரியாதை செலுத்திய வண்ணம் உள்ளனர்.

Leave your comments here...